"என்ஃபீல்டு பிடிக்காது".. ஆனால்.. எனக்கு பிடிச்ச பைக் இதுதான்.. மனம் திறந்த ராகுல் காந்தி
டெல்லி: சமீபத்தில் 'தி பாம்பே ஜார்னி' எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, தான் பைக்குகளை ஓட்டுவதை விடவும் சைக்கிள்களை ஓட்டுவதைதான் பெரிதும் விரும்புவதாக கூறியுள்ளார். மட்டுமல்லாது தனது பிடித்த பைக் குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.
பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கியதிலிருந்து ராகுல் காந்தி தேசிய அளவில் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார். கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகல், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கால் வைத்த இடங்கள் அனைத்தும் கடும் சரிவை ஏற்படுத்திய நிலையில், கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தேர்வில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ராகுல் போட்டியில் பங்கேற்காமல் விலகி நின்றார். ஆனால் அரசியலிலிருந்து அல்ல. எனவே தேர்தல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார் செய்ய இவர் களப்பணியில் இறங்கினார். தேர்தல் முடிந்து மல்லிகர்ஜூன கார்கே புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.

யாத்திரை
அதேபோல ராகுல் அடுத்த சில நாட்களில் தனது யாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து 12 மாநிலங்களை 150 நாட்களில் கடந்து ஜம்முவில் யாத்திரையை முடிப்பது என்பதுதான் திட்டம். அதற்கேற்றார் போல செப்டம்பர் மாதம் யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என ராகுல் கால் பதித்த மாநிலங்களில் கட்சிக்கு அமோக வரவேற்பு இருந்தது. இந்த யாத்திரை தொடங்கும் போது அவர் அணிந்திருந்த டீ-சர்ட் வெளிநாட்டு நிறுவனத்தினுடையது என்றும், எனவே அவர் இந்திய பொருட்களை புறக்கணிக்கிறார் எனவும் பாஜக விமர்சித்திருந்தது. ஆனால் இந்த விமர்சனத்தையே காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.

டீ-சர்ட்
அதாவது இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி இந்த வெள்ளை நிற டீ-சர்ட்டை மட்டுமே அணிந்து பயணிக்க தொடங்கினார். மழைக்கும் வெயிலுக்கும் ஏற்றார் போல யாத்திரையில் பங்கேற்றவர்கள் ஆடைகளை மாற்றிக்கொண்டு இருக்க இவர் வெறும் டீ-சர்ட்டுடன் மட்டுமே பயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில் யாத்திரை 108வது நாளில் டெல்லியை வந்தடைந்தது. அப்போதும் அவர் வெறும் டீ-சர்ட் மட்டுமே அணிந்திருந்தார். டெல்லியில் குளிர் 7 டிகிரி வரை இருக்கிறது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு குளிரிலும் ராகுல் காந்தி டீ-சர்ட் மட்டுமே அணிந்துக்கொண்டு அதிகாலையில் யாத்திரையில் பங்கேற்றிருந்தது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.

கார்
இவ்வாறு இருக்கையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர், தனது பிடித்த பைக் குறித்து மனம் திறந்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது, "எனக்கு பைக் ஒட்டுவதை காட்டிலும் சைக்கிள் ஓட்டுவதுதான் மிகவும் பிடித்த விஷயம். அதேபோல எனக்கு கார் ஓட்டுவதற்கு பிடித்திருந்தாலும் எனக்கென சொந்தமாக கார் ஏதும் இல்லை. எனது அம்மாவிடம்தான் கார் இருக்கிறது. கார் குறித்து எனக்கு ஓரளவு தெரியும். காரின் 90% பாகங்களை என்னால் சரியாக அடையாளம் கண்டுவிட முடியும். இருப்பினும் எனக்கு கார்கள் மீது அதிக மோகம் இல்லை.

பைக்
பைக்குகளை பொறுத்த அளவில் பழைய லாம்ப்ரெட்டா R1 மிகவும் அழகாக இருக்கும். இதை ஓட்டுவதற்கு நிறைய முயற்சிகள் தேவை, அதனால் இந்த பைக் ஆபத்தானதும் கூட. பலர் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் குறித்து பேசுகிறார்கள். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. அதற்கு பதில் யமஹாவின் RD350 எனக்கு பிடித்திருக்கிறது. அதேபோல நான் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நான் ஒரு பைக்கை வைத்திருந்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த பைக். அதுதான் அப்ரிலியா ஆர்எஸ் 250. இதன் மீது நான் அதீத காதல் கொண்டிருந்தேன்.

இந்தியா தவறவிட்டுவிட்டது
அது எல்லாம் லண்டனில்தான். இங்கு டெல்லியை பொறுத்த வரையில் பைக்கில் செல்வதை விட சைக்கிளில் செல்வதே பாதுகாப்பானது. எனவேதான் நான் சைக்கிளை அதிகம் விரும்புகிறேன். அதேபோல மின்சார பைக்குகளை பொறத்த அளவில் இந்தியாவில் இந்த பைக்குகளுக்கான பேட்டரி தயாரிப்பை வலுப்படுத்தி இருக்க வேண்டும். இதற்கான முறையான அடித்தளத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா இதனை தவற விட்டுவிட்டது. எனது தந்தை ஒரு விமானி என்பதால் விமான பயணம் மற்றும் விமான இயக்கம் குறித்தும் சில தகவல்களை என்னுடன் பகிர்ந்திருக்கிறார். எனவே விமான இயக்கம் குறித்து கொஞ்சம் புரிதல் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications