திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை நாளை ராகுல்.. பிரியங்கா காந்தி சந்திக்கிறார்கள்
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் கடந்த ஆகஸ்ட் இறுதி வாரம் தொடங்கி தற்போது வரை சுமார் 3மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த போது அமலாக்கத்துறை வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சிதம்பரம் இதுவரை சிறையில் இருந்து வெளியே வரவில்லை. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை நாளை சந்திக்க உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications