டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன தெளிவு.. டைமிங் - ரைமிங்கோடு சிறப்பாக பேசிய ராகுல் காந்தி.. வாயை பிளந்த பாஜக!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேலை மீண்டும் கையில் எடுத்த ராகுல்... மக்களவையில் காரசார விவாதம்- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ''பப்பு பப்பு'' என்று கூறி பாஜக தனி மனித தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் அனைத்திற்கும் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பதில் அளித்து வருகிறார் ராகுல் காந்தி.

    சென்ற வருடம் நடந்த பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது ராகுல் காந்தி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் பேசிவிட்டு பின் பிரதமர் மோடியை சென்று கட்டிபிடித்ததும், தனது கட்சியினரை பார்த்து கண் அடித்ததும் மிகப்பெரிய வைரலானது. அதேபோல்தான் நேற்று ராகுல் பேசியதும் மிக முக்கியமான பேச்சாக மாறியுள்ளது.

    அந்த 3-ஆவது கேள்வி... இது அதைவிட பயங்கரம்.. ராகுலின் பலே பலே டுவீட் அந்த 3-ஆவது கேள்வி... இது அதைவிட பயங்கரம்.. ராகுலின் பலே பலே டுவீட்

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    நேற்று ராகுல் காந்தி ரபேல் ஊழல் குறித்து பேசிய போது, ராகுல் மீண்டும் பழைய விஷயங்களை பேசுவார் என்றுதான் பாஜகவினர் நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோவா முதல்வர் மனோகர் பார்க்கரின் ஆடியோ குறித்து ராகுல் பேசினார். ரபேல் ஒப்பந்தம் குறித்து மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோவை வைத்து ராகுல் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    மோடி மீது தாக்குதல்

    மோடி மீது தாக்குதல்

    அதேபோல், நேரடியாக பிரதமர் மோடிக்கும் ரபேல் ஒப்பந்தத்திற்கு தொடர்பு இருக்கிறது. இந்த ஊழலில் பிரதமர் மோடிக்கும் பங்கு உள்ளது என்று வெளிப்படையாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமனையும் தனது பேச்சிற்கு இடையில் அவ்வப்போது கிண்டல் செய்தார். மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோவை வெளியிட அனுமதி கேட்டார்.

    அதிமுக பாவம்

    அதிமுக பாவம்

    அதோடு ராகுல் காந்தி அதிமுகவையும் விட்டுவைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அதிமுகவினர் மோடியை காப்பாற்ற வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள். அதிமுகவினருக்கு பின் நிர்மலா சீதாராமன் ஒளிந்து கொள்கிறார் என்று கிண்டல் செய்தார். இது அவையில் மேகதாது பிரச்சனை குறித்து கூச்சல் எழுப்பிக் கொண்டு இருந்த அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அம்பானி பெயர்

    அம்பானி பெயர்

    மோடிக்கும், அனில் அம்பானிக்கு ரபேல் ஊழலில் தொடர்பு இருக்கிறது என்பதை வெளிப்படையாக ராகுல் கூறினார். மூன்று முறை அனில் அம்பானி பெயரை அவையில் வெளிப்படையாக ராகுல் காந்தி கூறினார். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததும் ''டபுள் ஏ'' என்று கிண்டலாக அனில் அம்பானி பெயரை குறிப்பிட்டார்.

    தனி நபர்

    தனி நபர்

    ராகுல் காந்தி அதிமுக கூச்சலையும், பாஜகவினர் எதிர்ப்பையும் மீறி தனியாக பேசினார். ஆனாலும் அவர் பேச்சில் எந்த விதமான நடுக்கமும் உளறலும் இல்லை. முன்னெப்போதையும் விட மிக சிறப்பாகவே ராகுல் பேசினார். தனித்து நிற்கும் வலிமை அவரது பேச்சில் இருந்தது.

    முன்னேற்றம்

    முன்னேற்றம்

    அதேபோல் மோடி, அனில் அம்பானி என்று பெயர்களை குறிப்பிட்டாலும், எங்கும் தனி நபர்களை தவறாக விமர்சிக்கவில்லை. மாறாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ராகுல் காந்தியின் அறிவுத்திறன் என்ன என்றெல்லாம் விமர்சனம் செய்தார். ஆனால் அதை எல்லாம் கேட்டு ஆத்திரம் கொள்ளாமல், மிகவும் இயல்பாக ராகுல் காந்தி பேசினார். ராகுலின் இந்த பேச்சு அவரது அரசியல் வாழ்வில் மிக முக்கியமானதொரு பேச்சாகும்.

    English summary
    Congress chief Rahul Gandhi's yesterday speech in Lok Sabha on Rafale deal is one of his greatest speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X