Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு மே மாதத்தில் சூப்பர் முன்னேற்றம்.. தொழில், வருமானத்தில் மாற்றம்
மே மாத பலன்கள் 2026: கன்னி ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. அந்த வகையில், கன்னி ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு வருமான வரித் துறை, காவல் துறை, விஜிலென்ஸில் வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. மருத்துவர் சீட் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு தகராறுகள் கண்டிப்பாக ஏற்படும். உடல் உஷ்ணம் ஏற்படும். சளி, கண் பிரச்சனை, தொண்டை எரிச்சல் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில்
பெரிய மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். அருமையான தொழில் அமையும். பண வரவு நன்றாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். அசாத்தியமான வெற்றிகள் ஏற்படும் காலகட்டம். புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் வெளிவரும். பணம், பொருளாதாரம், இடமாற்றம் போன்றவை வருவதற்கான நல்ல காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் அம்மாவுடைய ஆரோக்கியம், கால் முட்டி, லிகமென்ட், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, எலும்புகள் தேய்மானம், கண்ணாடி மாற்றக்கூடிய சூழல் ஏற்படும். கல்லூரிக்கு என்று பணம் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், அரசு சம்பந்தப்பட்ட துறை, நெடுஞ்சாலைத் துறை, பைலட், ஏர் ஹோஸ்டர் துறைகளில் இருப்பவர்கள், பைலட்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பிரச்சனை
ஆடிட்டிங், அக்கவுண்ட்ஸ், ஆசிரியர் துறை, நகைக் கடை, வெள்ளிக் கடை, பேங்கிங் துறை, ஆபரணங்கள், ஃபேஷன் ஜூவல்லரி, மீடியாக துறை போன்றவற்றிற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். மேலதிகாரிகளால் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான அமைப்பு உள்ளது. வேலையே வேண்டாம் என்று கூறி புதிய வேலைகளுக்கு செல்வீர்கள். வேலையில் நிறைய அழுத்தம் ஏற்படும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நரசிம்மர் வழிபாடு, நரசிம்மர் காயத்ரியை கேட்பது, படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய ஏற்றமும், வெற்றியும் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீத நன்மைகளும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications