மின் தடை, வேலை இல்ல.. ஒரு காலத்துல எப்படி இருந்த நாடு தெரியுமா? இப்படி பண்ணிட்டீங்களே! ஆவேசமான ராகுல்!
டெல்லி : மின்சாரத்தடை, வேலையின்மை, பணவீக்க பிரச்சனை என அடுத்தடுத்த சிக்கல்கள் உள்ள நிலையில், உலகில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த பொருளாதார நாட்டை எப்படி சீரழிக்கலாம் என்பதை பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி படமாகியுள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஹரியானா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல இடங்களில் 10 மணிநேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பல பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர் மத்திய அரசை கடுமையாக மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடும் மின் தடை
மின் தடையால் பல மாநிலங்கள் இருளில் மூழ்கி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மாற்று மின்சார வசதி இல்லாத மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நாட்டின் பெரும் பகுதிகள் மின்வெட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மத்திய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் தவறான நிர்வாகத்தால், கொளுத்தும் கோடையில் இந்த "செயற்கை" நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாகக் குற்றம்சாட்டியது.

நிலக்கரி தட்டுப்பாடு
நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்வதற்கான தளவாட ஆதரவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கவில்லை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் போதுமாக நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும் எனவும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

போதுமான நிலக்கரி இருப்பு
போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது என்றும், 21 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு மின் உற்பத்தி நிலையங்களில் உள்ளது, இது 10 நாட்களுக்கு போதுமானது எனவும் ஆர்.கே.சிங் கூறினார். 2019-20ல் நிலக்கரி வழங்கல் 569 மில்லியன் டன்னிலிருந்து 2021-22ல் 662 மில்லியன் டன்னாக உயர்ந்தது எனவும், திடீர் தேவை அதிகரிப்பால் லேசான சிக்கல் வந்ததாக விளக்கினார்.

ராகுல் காந்தி விமர்சனம்
இந்நிலையில், தற்போதைய மின் நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பிரதமரின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகமானது உலகின் மிகப்பெரிய வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கான ஒரு பாடம் என கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ""மின் நெருக்கடி, வேலை நெருக்கடி, விவசாயிகள் நெருக்கடி, பணவீக்க நெருக்கடி. பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால தவறான நிர்வாகம், ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எவ்வாறு அழிப்பது என்பது பற்றிய ஒரு ஆய்வு ஆகும்" என்று ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications