Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாய் பிஸ்கட் சர்ச்சை.. "உண்மையில் நடந்தது இதுதான்.." ராகுல் காந்தி பரபர விளக்கம்! என்ன சொன்னார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாய் பிஸ்கட்டை ராகுல் காந்தி கட்சி தொண்டருக்கு வழங்கியதாக பாஜக குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. காங்கிரஸின் ராகுல் காந்தி இதற்காகப் பாத யாத்திரை சென்று வருகிறார்.

 Rahul Gandhi says he gave the biscuit to owner as the Dog was nervous

எப்படிக் கடந்த 2022இல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினாரோ.. அதேபோல இப்போது மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்துகிறார்.

ராகுல் காந்தி பாத யாத்திரை: இதில் 66 நாட்களில் ராகுல் காந்தி மொத்தம் 6713 கிமீ பயணிக்க உள்ள நிலையில், இந்த யாத்திரை வரும் மார்ச் 20ஆம் தேதி நிறைவடைகிறது. இருப்பினும், இந்த யாத்திரை ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ராகுல் காந்தி சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, கோயிலுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என வரிசையாகப் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.

இந்த வரிசையில் ராகுல் இப்போது மற்றொரு சர்ச்சையில் இன்று சிக்கினார். இப்போது ராகுல் யாத்திரை ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. அப்போது காரின் மேற்புறம் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். அப்போது அங்கே நாய்க் குட்டி ஒன்று இருந்த நிலையில், அதற்கு ராகுல் பிஸ்கட் வழங்க முயன்றார். இந்த வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையானது. அதாவது ராகுல் காந்தி நாய்க்கு அளித்த பிஸ்கட்டை அது சாப்பிடாத நிலையில், அதே பிஸ்கட்டை ராகுல் காந்தி தொண்டருக்கு வழங்கியதாக பாஜக விமர்சித்தது.

பாஜக தாக்கு: இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா, "கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், காங்கிரஸ் தலைவர் கார்கே காங்கிரஸ் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இப்போது ராகுல் நாய் பிஸ்கட்டை தனது தொண்டருக்கு வழங்கி இருக்கிறார். கட்சித் தலைவரும் பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை இப்படி நடத்தினால் அவர்கள் கட்சி சீக்கிரமாகவே மாயமாகிவிடும்'' என்றார்.

அதேபோல அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ராகுல் காந்தியை விமர்சித்திருந்தார். இந்த பிஸ்வா சர்மா காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் சென்றவர்.. ராகுல் காந்தியை விமர்சித்த அவர், தன்னை அவரது குடும்பத்தினரால் நாய் பிஸ்கட் சாப்பிட வைக்க முடியாது என்று தெரிவித்தார், மேலும், "நான் ஒரு பெருமைக்குரிய அசாம் மாநிலத்தவன் மற்றும் இந்தியன்.. நான் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்யவே இவை தான் காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ராகுல் காந்தி இந்த சர்ச்சைகள் குறித்து தனது செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அதாவது கூட்டத்தைப் பார்த்து நாய் நடுங்கியதால் பிஸ்கட்டை அதன் உரிமையாளருக்குத் தந்து, நாய்க்குத் தரச் சொன்னதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "கூட்டம் அதிகமாக இருந்ததால் நாய் பயந்தது. இதனால் நாய் உரிமையாளரை அழைத்தேன். நான் நாய்க்கு பிஸ்கட் தந்த போது அது கூட்டத்தைப் பார்த்து நடுங்கியது. இதனால் நான் உரிமையாளரிடம் பிஸ்கட்டை கொடுத்து நாய்க்குத் தரச் சொன்னேன். நான் பிஸ்கட் தந்த நபர் தான் நாயைக் கொண்டு வந்தவர். அங்கே அதுதான் நடந்தது. ஆனால், சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிதாக ஆக்குகிறார்கள் என தெரியவில்லை" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+