பொருளாதாரம் பற்றி நிதியமைச்சருக்கு ஒன்றுமே தெரியவில்லை! ஊதுகுழலாக இருக்கிறார்:ராகுல் காந்தி அட்டாக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, ஹிட்லர் அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து தேர்தலில் வெற்றி பெற்றார். முழு அமைப்பையும் எங்களுக்கும் கொடுங்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது காண்பிக்கிறேன் எனக்கூறி பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
Recommended Video
மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைக்கு தீர்வு காணவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்லம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக போராட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீசார் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.

ராகுல் காந்தி பேட்டி
இந்நிலையில் இன்று ராகுல்காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதன்பிறகு பத்திகையாளர்களின் கேட்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் மத்திய நிதி அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:

புரிதல் பூஜ்ஜியம்
நாட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பது மத்திய நிதி அமைச்சருக்கு தெரியவில்லை. மக்கள் துயரப்படும் நிலையில் அதுபற்றிய அந்த தகவலும் மத்திய நிதி அமைச்சரிடம் இல்லை. இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய புரிதல் பூஜ்ஜியம் அளவில் தான் உள்ளது. அவர் ஒரு ஊதுகுழலாக தான் உள்ளார்.

போராட்டம் தொடரும்
என் குடும்பம் உயிர் தியாகம் செய்துள்ளது; குறிப்பிட்ட சித்தாந்தத்தை எதிர்ப்பது கடமையாக உள்ளது. இந்து-முஸ்லிம்கள் மோதலின்போதும், தலித்துக்கள் கொல்லப்படும்போடும் எங்களுக்கு வலிக்கிறது. இதை தடுப்பது தான் எங்களின் சித்தாந்தம்; இதற்காக போராடி வருகிறோம். குறிப்பிட்ட சித்தாந்தத்துடன் போராடுவதால் தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜனநாயகத்துக்காகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த போராட்டம் தொடரும்.

மோடி-ஹிட்லருடன் ஒப்பிட்டு
ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்; அவரும் (மறைமுகமாக மோடி) வெற்றி பெற்றுள்ளார். அவர் எப்படி வெற்றி பெற்றார்?. ஹிட்லர் அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து தேர்தலில் வெற்றி பெற்றார். முழு அமைப்பையும் எங்களுக்கும் கொடுங்கள் தேர்தலி்ல எப்படி வெற்றி பெறுவது என்பது காண்பிக்கிறேன்'' என்றார். இதன்மூலம் ஜெர்மனியில் சர்வாதிகாரியான ஹிட்லருடன் பிரதமர் நரேந்திர மோடியை ராகுல்காந்தி ஒப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அனைத்து அமைப்புகளையும் கட்டுப்பாட்டில் வைத்து ஹிட்லர் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு அதுதொடர்பாகவும் பிரதமர் மோடியை மறைமுகமாக ராகுல்காந்தி சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு கூறியது என்ன?
முன்னதாக அளித்த பேட்டியில் ராகுல் காந்தி ‛‛இந்தியாவில் இப்போது ஜனநாயகம் இல்லை. நமது நாடு சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளது. ஜனநாயகம் இறந்துவிட்டது. சர்வாதிகாரத்துக்கு எதிராக நிற்கும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்குதல் மட்டுமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தான் என் வேலை. இதனை, தொடர்ந்து செய்ய போகிறேன். ஆர்எஸ்எஸ்ஸை எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறேனோ அவ்வளவு கடுமையாக தாக்கப்படுவேன் என்பது தெரியும். ஆர்எஸ்எஸ்ஸை எதிர்ப்பதன் மூலம் என் மீது தாக்குதல் நடந்தால் நான் மகிழ்ச்சியாகவே கருதுவேன்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications