ராகுல் ஆவேசமாக பேசியபோது பொறுமையிழந்து பொங்கிய மத்திய அமைச்சர்.. குறுக்கே எழுந்து நின்று.. ஒரே அமளி
டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது இன்று ராகுல் காந்தி ஆக்ரோஷமாக பேசினார். அப்போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறுக்கீட்டு ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க கூறினார். இருப்பினும் ராகுல் காந்தி கண்டுக்கொள்ளாமல் பேசி கொண்டிருந்தார். இதனால் சபையில் கடும் அமளியோடு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
மணிப்பூர் வன்முறையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே அதானி பெயரை உச்சரித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:
சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைக்கிறார் நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து உள்ளீர்கள். மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டது.
மணிப்பூரில் பாரத மாதாவை படுகொலை செய்துவீட்டீங்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரததாயை நீங்கள் கொன்றுவீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள். இந்திய ராணுவத்தால் அங்கு ஒரே நாளில் அமைதியை கொண்டு வர முடியும். ஆனால் நீங்கள் அதனை செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் குரலை கேட்கவில்லை என்றால் அவர் யாருடைய குரலை கேட்பார்'' என ஆக்ரோஷமானார்.
இதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கோஷமிட்டனர். அப்போது திடீரென மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலையீட்டு ‛‛ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்'' என்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தி தொடர்ந்து எதையும் கண்டுக்கொள்ளாமல் மணிப்பூர் விவகாரம் குறித்து தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தார். இதனால் லோக்சபாவில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications