டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது மத்திய அரசின் புதிய மசோதா. இது லோக்சபாவில் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.

Rahul Gandhi slams CAB passage

இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார், அதில், இம்மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகும்.

இதனை ஆதரிப்பவர்கள் தேசத்தின் அடித்தளத்தையே அடியோடு நாசமாக்கும் முயற்சிக்கு துணையாக இருக்கிறார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார். ராகுலின் சகோதரி பிரியங்கா வதேராவும் இதேபோல் குடியுரிமை மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தமது ட்விட்டர் பதிவில், தேசத்தின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் ரத்தம் சிந்தி பாடுபட்டிருக்கின்றனர். நமது தேசத்தின் பரந்தமனப்பான்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என சாடியிருந்தார்.

English summary
Congress Senior leader Rahul Gandhi said that "The #CAB is an attack on the Indian constitution. Anyone who supports it is attacking and attempting to destroy the foundation of our nation" in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X