நாங்கள் ஒன்னும் வேலைக்காரர்கள் இல்லை.. டிரம்பிடம் நாட்டை விற்றுவிட்டீர்கள்.. மத்திய அரசை சாடிய ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஒரு தலைபட்சமானது. டொனால்ட் டிரம்புடன் ‛இந்தியா' கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தால் நாங்கள் வேலைக்காரர்களாக இல்லாமல் சரிக்கு சமமாக அவரை எதிர்கொண்டு ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்போம். ஆனால் இப்போது இந்தியாவை விற்றுவீட்டீர்கள். இந்திய விவசாயிகளை நசுக்குவதற்கான கதவுகளை ஒப்பந்தத்தின் மூலமாக திறந்து விட்டீர்கள் என்று நாடாளுமன்றத்தின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக மத்திய அரசை தாக்கி பேசினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தார். தற்போது அந்த வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது. இதற்கு பதிலாக அமெரிக்காவின் விவசாயம் உள்பட சில முக்கிய பொருட்களுக்கு நம் நாடு வரியை பூஜ்ஜியமாக்கப்பட உள்ளது.

மேலும் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நம் நாட்டின் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

ராகுல் காந்தி பேச்சு

அதேவேளையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறி வருகிறது. இதற்கிடையே தான் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று விவாதம் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தில் பேசினார். அப்போது இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:

3 அம்சங்கள்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த விதிமுறைகை டிரம்ப் தீர்மானித்துள்ளார். இதன்மூலம் நம் நாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அரசு 3 முக்கிய அம்சங்களை பின்பற்றி இருக்க வேண்டும்.

முதல் அம்சம்

டொனால்ட் டிரம்புடன் ‛இந்தியா' கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் முதலாவது விஷயமாக அமெரிக்க டாலர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நண்பர்களாக இருப்போம். ஏனென்றால் டாலரின் மதிப்பை காக்கும் அம்சம் இந்திய மக்களிடம் உள்ளது.

2வது அம்சம்

இது வேண்டும் என்றால் ஒப்பந்தம் சமமாக இருக்க வேண்டும். எங்களை வேலைக்காரர் போல் நடத்தக்கூடாது என்று கூறியிருப்போம். இரண்டாவதாக, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.

புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அவர்(டிரம்ப்) கூறுகிறார். இது நம் நாட்டின் நலனுக்கு எதிரானது. இப்போது நாம் யாரிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது. நம்முடைய பிரதமர் அல்ல.

3வது அம்சம்

மூன்றாவது விஷயமாக டிரம்பிடம் நீங்கள் உங்களின் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அதனை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். அதேபோல் நாங்கள் எங்கள் விவசாயிகளை பாதுகாப்போம். பாகிஸ்தானை போல் எங்களை நடத்த விடமாட்டோம் என்று கூறியிருப்போம்.

நாட்டையை விற்றதாக...

ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை. இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்க உங்களுக்கு வெட்கமில்லையா. நம் ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கான கதவை திறந்துவிட்டீர்கள். '' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுலின் இந்தக் கருத்துக்களுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிரதமரைக் குறித்த விமர்சனங்களைக் கடுமையாகக் கண்டித்து, "இந்த உலகில் எந்த மனிதனும் இந்தியாவைத் தொடவோ அல்லது விற்கவோ பிறக்கவில்லை," என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+