ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று- தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!
டெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர்,
தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி என முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி சோதனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த ராகுல், இறுதியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லவிருந்தார். இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக தனது மேற்கு வங்க பிரச்சார பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
மேற்கு வங்க மாநில பிரச்சார பயணத்தை ராகுல் ரத்து செய்ததற்கு அவருக்கு ஏற்பட்ட உடல்வலியும், சோர்வும் தான் காரணம் எனக் கூறப்பட்டது. இப்போது அதனை உறுதி செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று ராகுலுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும், ராகுல்காந்தியின் அன்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications