டீ-சர்ட்டுடன் பயணிக்கும் ராகுல் காந்தி! 'சளி பிடிக்கவில்லையா?' எனும் கேள்விக்கு என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று டெல்லியில் நுழைந்தது. இந்நிலையில் டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ராகுல் காந்தி எப்படி வெறும் டீ-சர்ட்டுடன் பயணிக்கிறார் என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்பியிருந்தனர். இதற்கு அவர் கூறியுள்ள பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காங்கிரஸின் இளம் தலைவரான ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராகவும் எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்திரையை' தொடங்கினார். செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையானது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 150 நாட்களில் 12 மாநிலங்களை கடந்து 3,750 கி.மீ தூரம் பயணித்து காஷ்மீரை அடைய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து, சென்ற வாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது 100வது நாளை யாத்திரை நிறைவு செய்தது. இதனையடுத்து 108வது நாளான நேற்று இந்த யாத்திரை டெல்லிக்குள் நுழைந்தது. டெல்லியில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இவருடன் யாத்திரையில் சுமார் 40,000 பேர் வரை பங்கேற்றிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் யாத்திரையில் பங்கேற்றார்.

பாதுகாப்பு
டெல்லியில் யாத்திரைக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். அதாவது, இதற்கு முன்னர் எல்லா மாநிலங்களிலும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தியை சுற்றி காவல்துறையினர் கயிறு கொண்டு ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி இருந்தனர். ஆனால் டெல்லியில் கயிறு இருந்தும் போதுமான காவல்துறையினர் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்துவிட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்களே பாதுகாப்பு அரணை உருவாக்கி ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.

பத்திரிகையாளர்கள் கேள்வி
இதனையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "எனக்கு எப்படி சளி பிடிக்காமல் இருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து என்னிடம் கேள்வியெழுப்பி வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார். பின்னர் அதற்கு பதிலளித்த அவர், "விவசாயிகள், விவசாய தொழிலாளிகள், கூலி தொழிலாளிகள், தொழிற்சாலை தொழிலாளர்களிடம் ஏன் இந்த கேள்வியை அவர்கள் கேட்பதில்லை?" என்று பதில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "நான் சுமார் 2,800 தொலைவு நடந்திருக்கிறேன். ஆனால் இது பெரிய விஷயமல்ல என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இந்நாட்டின் விவசாயிகள் இந்த தூரத்தை அசால்ட்டாக கடந்து செல்கின்றனர். ஆக இந்த பணத்தின் மூலமாகவும், பாஜக-ஆர்எஸ்எஸ் தாக்குதல் காரணமாகவும் நான் எப்போதும் சூடாகவே இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தீர்வு
மேலும், "இந்த பயணத்தில் நான் ஏராளமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு மனிதர்களை சந்தித்து அவர்களது கையை பிடிக்கும்போது எனக்கு தெரிந்துவிடும் அவர்கள் எந்த மாதிரியான உழைப்பாளிகள் என்று. ஏனெனில் அவர்கள் செய்யும் தொழில் அவர்களுடைய கைகளில் பிரதிபலிக்கும். இந்த உழைப்புக்கும், அவர்களது கவலைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அப்படி இருக்கையில் சில பணக்காரர்களால் இந்த கவலைகள் மறக்கடிக்கப்படுகின்றன. இது மாற்றப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கடும் குளிர்
டெல்லியில் நேற்று தொடங்கிய இந்த யாத்திரையானது 9 நாட்கள் டெல்லி முழுவதும் பயணிக்கும். டிசம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி தொடக்கத்தில் டெல்லியை கடந்து ஜம்மு நோக்கி யாத்திரை பயணிக்க இருக்கிறது. இக்காலகட்டம் கடும் பனிப்பொழிவு நிறைந்த காலகட்டமாகும். கடும் குளிர் காரணமாக டெல்லியில் மாணவர்களுக்கு 15 நாட்கள் வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications