ரபேல்: தம்பிதுரையின் நறுக் கேள்விகள்.. மேசையை தட்டி எக்ஸலண்ட் என பாராட்டிய ராகுல்.. லோக்சபாவில் கலகல
Recommended Video

டெல்லி: நாடாளுமன்றத்தில் ரபேல் விவகாரம் குறித்து பாஜகவை எதிர்த்து கேள்வி எழுப்பிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் பேச்சை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேஜையை தட்டி வரவேற்றார். பின்னர் எக்ஸலண்ட் எக்ஸலண்ட் என பாராட்டினார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அனைத்து பாராட்டும்படியாகவே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ராகுல் காந்தி நீண்ட நேரம் பேசினார்.
பின்னர் தனது உரையை முடித்தவுடன் நேராக பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே சென்ற அவர் மோடிக்கு கை கொடுத்து அவரை கட்டி அணைத்தார். பதிலுக்கு நரேந்திர மோடியும் ராகுலுக்கு கைகுலுக்கி தோளில் தட்டிக் கொடுத்தார்.

ரபேல் விவகாரம்
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் ராகுலின் இந்த செயல்பாடுகள் அவருக்கு பாராட்டுகளையே வாங்கிக் கொடுத்தன. இந்த நிலையில் ரபேல் விவகாரம் குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன் லோக்சபாவில் ராகுல் காந்தி பேசிய பேச்சுகள் ரசிக்கும்படியாக இருந்தது.

நடவடிக்கை
யாரையும் பாரபட்சம் இல்லாமல் பாயிண்ட் பாயிண்டாக பேசி விளாசினார். இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில் எச்ஏஎல் நிறுவனத்தை காங்கிரஸ் அரசு சிறப்பாக நிர்வகிக்கவில்லை என்று நீங்கள் (பாஜக) கூறுகிறது. ஆனால் உங்கள் அரசு அதன் முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறீர்கள்.

கேள்வி
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கே ரபேல் விமானங்களை செய்யும் வாய்ப்பை அளித்திருக்கலாமே? அனுபவம் இல்லாத நிதிசுமையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அந்த வாய்ப்பை தந்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
|
குற்றம்சாட்டிய ராகுல்
அப்போது தம்பிதுரையின் பேச்சை ராகுல் எக்ஸலண்ட் எக்ஸலண்ட் என பாராட்டினார். அத்துடன் மேஜையை தட்டியும் வரவேற்றார். அதோடு நிற்காமல் அவர் ஜோதிராதித்ய சிந்தியாவை பார்த்து கண்ணடித்தார். ரபேல் விவகாரத்தில் இருந்து மோடியை காப்பாற்றவே அதிமுக எம்பிக்கள் கோஷமிடுவதாக ராகுல் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications