மகா கும்பம் முதல் டெல்லி தேர்தல் வரை.. எங்கே போனார் ராகுல் காந்தி? ஆளையே காணோமே!
டெல்லி: இந்தியாவில் அரசியல் மற்றும் சமுதாய ரீதியாக இரண்டு முக்கியமான நிகழ்வுகள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. ஒன்று, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பம் மற்றும் டெல்லியின் சட்டமன்றத் தேர்தலுக்காக நடைபெறும் பிரச்சாரம். நாடு முழுவதிலும் உள்ள தலைவர்கள், மக்கள் இதற்காக லட்சக்கணக்கில் திரண்டு உள்ளனர். ஆனால் லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, இந்த நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே உள்ளார். ஒரு நல்ல அரசியல் தலைவராக லைம்லைட்டிற்கு வராமல் ஒதுங்கியே இருக்கிறார்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி:
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும், உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் நிகழ்வாகவும் விளங்கும் மகா கும்பம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பாஜக தலைவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இதில் பங்கேற்று உள்ளனர். உலகளாவிய மேடையில் இந்திய கலாச்சாரத்தின் வலிமையை வெளிக்காட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
முழு யோகி அமைச்சரவையும் பிரயாக்ராஜில் சங்கமத்தில் சமீபத்தில் புனித நீராடியது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் பிற முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் ஆகியோரும் வரும் நாட்களில் மகாகும்பத்திற்கு வர உள்ளனர்.
இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் மிக சிறப்பான நாளான இந்த நிகழ்வை கொண்டாடாமல் ராகுல் காந்தி ஒதுங்கியே இருக்கிறார். அவர் தன்னை ஒரு "ஜனேயுதாரி பிராமணர்" என்று கூறிக்கொண்டாலும் இந்த நிகழ்வை புறக்கணித்து இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் கணேஷ் சதுர்த்தி மற்றும் நவராத்திரி போன்ற முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பதையும் அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுகளுடன் அவருக்கு தொடர்பு இல்லாததை போல காட்டிக்கொள்கிறார்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை மற்றும் கும்பாபிஷேகம் இந்தியாவின் கலாச்சார வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு ஆகும். ஆனால் இந்த முக்கிய நிகழ்வில் ராகுல் காந்தி இல்லாதது, கோவிலின் கும்பாபிஷேகத்திலிருந்து காங்கிரஸ் தலைமை வேண்டுமென்றே விலகி இருப்பது, நாடு முழுவதும் விமர்சனங்களை சந்தித்தது.
முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் இருந்து அவர் தொடர்ந்து விலகியே இருப்பது கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை சந்தித்துள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு 2025: நாட்டையே அவமதித்தல்
குடியரசு தின அணிவகுப்பு என்பது இந்தியாவின் ஜனநாயகம், ராணுவ வீரம் மற்றும் ராணுவ வீரர்களின் தியாகம் ஆகியவற்றின் கொண்டாட்டமாகும். ஆயினும்கூட, இந்த ஆண்டு, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இதில் கலந்து கொள்ளவில்லை. இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் விதமாக அவரின் செயல் இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்த நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டில் விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருந்தார். அவருக்கு நாட்டின் மீது அக்கறையில்லையோ என்ற கேள்வியையும்.. அவரின் தலைமைப்பண்மை பற்றிய கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.
அரசியலமைப்பு நாள் புறக்கணிப்பு:
அரசியலமைப்பை காக்க வேண்டும் என்று அவ்வப்போது பேசும் ராகுல் காந்தி அரசியல் சாசன தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை. இதற்காக நடந்த நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்திய குடியரசுத் தலைவரை வாழ்த்தவில்லை. அவருக்கு நாட்டின் மீது அக்கறையில்லையோ.. அரசியலமைப்பு சட்டம் மீது அக்கறையில்லையோ என்ற கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.
காங்கிரஸின் கொண்டாட்டங்களில் கூட கலந்துகொள்ளவில்லை:
ராகுல் காந்தி தேசிய நிகழ்வுகளில் இருந்து விலகியிருப்பது மட்டுமல்ல, காங்கிரஸின் உள் கட்சி கொண்டாட்டங்களையும் அவர் புறக்கணித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கட்சியின் வெற்றிகளுக்குப் பிறகு, ராகுல் காந்தி வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்க மறுத்ததால், கட்சி தொண்டர்கள் மனமுடைந்து அவரது தலைமையை கேள்விக்குள்ளாக்கினர். இக்கட்டான தருணங்களில் இப்படி இல்லாதிருப்பது அவரது தலைமைத்துவத்தில் சீரியசாக இல்லாததையும், கட்சியின் அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இல்லாததையும் காட்டுகிறது.
மகாகும்ப கூட்ட நெரிசல்: குற்றம் சாட்டிய ராகுல் காந்தி
முக்கிய தேசிய நிகழ்வுகளில் ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் வராதது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும், உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் நிகழ்வாகவும் விளங்கும் மகா கும்பம் நிகழ்வை அவர் புறக்கணித்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் கூட ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக ஆப்சென்ட்.
ராகுல் காந்தி எங்கே? கும்பம், குடியரசு தின விழா மற்றும் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஏன் காணவில்லை? என்ற கேள்விகள் தீவிரமாக எழுந்துள்ளன.
காங்கிரஸின் பிரச்சாரம் வலுவிழந்து, அதன் தலைமை பலவீனமடைந்து வருவதால், ஒரு முக்கியமான கேள்வி பலரின் மத்தியில் எழுகிறது.. அந்த கேள்வி.. நாட்டின் முக்கிய நிகழ்வுகளுடன் தொடர்பு இல்லாத.. நிகழ்வுகளில் பங்கேற்காத ஒரு தலைவர் மக்களுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? மக்களின் தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications