"உங்க திருமணத்துக்கு தான் வெயிட்டிங்".. காதில் கேட்டதுமே ராகுல் கொடுத்த ரியாக்சன்.. சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளியையொட்டி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் பாரம்பரியமிக்க கண்டேவாலா இனிப்பு கடைக்கு சென்றார். அப்போது கடை உரிமையாளர், ‛‛உங்களின் திருமணத்துக்கா காத்திருக்கிறோம்'' என்று கூறியதும், அதற்கு ராகுல் காந்தி கொடுத்த ரியாக்சனும் இணையதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் பரிமாறி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். டெல்லியிலும் நேற்று கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

rahul-ji-please-get-married-soon-and-were-waiting-says-ghatewala-sweet-shop-owner-to-rahul-gandhi

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தீபாவளி பண்டிகையொட்டி தனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஸ்வீட்ஸ் வாங்க சென்றார். ஓல்டு டெல்லியில் உள்ள பாரம்பரிய மிக்க கண்டேவாலா இனிப்பு கடைக்கு சென்றார்.

இந்த கடை ராகுல் காந்தியின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி மற்றும் அவரது பிற குடும்ப உறுப்பினர் இந்த கடைகளின் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் ராகுல் காந்தி நேற்று அந்த கடைக்கு சென்றார்.

ராகுல் காந்தியை கடையின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். ராகுல் காந்தியின் நெற்றியில் திலகமிடப்பட்டது. அதன்பிறகு ராகுல் காந்தி இமார்த்தி (ஜிலேபி வகை), பெசன் லட்டு ஆகியவற்றை தயாரித்தார். முன்னதாக ராகுல் காந்தி உரிமையாளர், பணியாளர்களிடம் உரையாடினார். அப்போது ராகுல் காந்தியின் திருமணத்துக்காக காத்திருப்பதாக கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கூறினார்.

இதுபற்றி கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், ‛‛ ராகுல் கநா்தி தனது வீட்டுற்கும், நண்பர்களுக்கும் ஸ்வீட்டுகளை வாங்கினார். அவரே ஸ்வீட்ஸ் செய்து ருசித்தார். அவரது தந்தை ராஜீவ்காந்திக்கு இமார்டி, பெசன் லட்டு மிகவும் பிடிக்கும். இதனால் அதனை செய்யும்படி கூறினேன். அவர் 2 இனிப்புகளையும் செய்தார்.

ராகுல் காந்தி திருமணத்துக்கான தகுதியான இளைஞராக இருக்கிறார். அதனால் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம். உங்களின் திருமண இனிப்பு ஆர்டருக்கும் தான்’’ என்று கூறினேன்.

இனிப்பு கடைக்காரர், ‛‛உங்களின் திருமணத்துக்காக காத்திருக்கிறோம்’’ என்று கூறியதுமே, ராகுல் காந்தி சிரித்துவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக ராகுல் காந்தி கடை பணியாளர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார். அதேபோல் ராகுல் காந்தி கடைக்குள் நுழைந்து, வெளியே வந்தது முதல் அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‛‛புகழ்பெற்ற காண்டேவாலா ஸ்வீட் கடையில் நான் இமார்தி மற்றும் பெசன் லட்டு ஆகியவற்றை முயற்சி செய்தேன். நூற்றாண்டு கடந்த இந்த கடையின் சுவைஇன்னும் மாறவில்லை. சுத்தமான, பாரம்பரிய மற்றும் இதயத்தை தொடும் வகையிலும் இருக்கிறது.

தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல. உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது. உங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறீர்கள்? எப்படி சிறப்பானதாக மாற்றுகிறீர்கள்? என்று எங்களிடம் கூறுங்கள்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+