ஆக்சிஜன் மாஸ்க்கில் சோனியா! ‛‛கருணையின் உருவமே’’ என போட்டோ போட்டு உருகிய ராகுல்! என்னாச்சி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛கருணையின் மறுஉருவமான என் தாய் நெருக்கடியில் உள்ளார்'' என முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து இருக்கும் சோனியாவின் போட்டோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ராகுல் காந்தி உருக்கமாக கூறியுள்ள நிலையில் பின்னணி தகவல் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் மீது ராகுல் காந்தி அதிக பாசம் வைத்துள்ளார். தனது தாய் மீதான பாய் குறித்து அவர் தனது சமூக வலைதளங்களில் போட்டோக்கள் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 Rahul posts picture of Sonia Gandhi who wear oxygen mask during emergency landing with a caption ‛Grace under pressure’

இந்நிலையில் தான் ராகுல் காந்தி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனியா காந்தியின் போட்டோ ஒன்றை பகிர்ந்தார். இந்த போட்டோவும், போட்டோவுக்கு ராகுல் காந்தி கொடுத்த விளக்கமும் காங்கிரஸ் கட்சியினரை உருக வைத்தது.

அதாவது ராகுல் காந்தி பகிர்ந்த போட்டோவில் சோனியா காந்தி விமானத்தில் பயணிக்கிறார். ஜன்னலையொட்டிய சிறப்பு இருக்கையில் அமர்ந்திருக்கும் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்துள்ளார். அதாவது சோனியா காந்தி விமானத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மூலம் சுவாசிக்கும் வகையில் அந்த போட்டோ அமைந்து இருந்தது.

இந்த போட்டோவுக்கு ராகுல் காந்தி, ‛‛அம்மா, கருணையின் மறுஉருவம் நெருக்கடியில் இருக்கிறது'' என உருக்கமாக கூறியிருந்தார். இதனை பார்த்த பலரும் சோனியா காந்தியின் உடல்நலம் பற்றி கவலை கொண்ட நிலையில் தாய் மீதான ராகுல் காந்தியின் பாசத்தை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த போட்டோவை ராகுல் காந்தி ஏன் பகிர்ந்தார்? சோனியா காந்திக்கு என்ன பிரச்சனை? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுபற்றி விசாரித்தபோது பின்னணி விபரம் தெரியவந்து. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மதிமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்பட 26 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமையேற்றார். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு INDIA என பெயரிடப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு சோனியா, ராகுல் ஆகிய இருவரும் தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மத்தியபிரதேச தலைநகர் போபாலில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வேளையில் முன்னெச்சரிக்கையாக சோனியா காந்தி விமானத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்தினார்.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை தான் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் நேற்று பதிவு செய்ததும், தற்போது அந்த போட்டோ இணையதளங்களில் வேகமாக பரவி வருவதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது லோக்சபாவில் சோனியா காந்தியிடம் பிரமதர் மோடி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+