நாட்டை நினைத்து பயமாக இருக்கிறது.. அமித் ஷா முன்னிலையில் பாஜகவை விமர்சித்த பஜாஜ் ஓனர்.. சர்ச்சை!
பாஜக அரசு காரணமாக நாட்டில் அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று பஜாஜ் நிறுவனர் தலைவர் ராகுல் பஜாஜ் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: பாஜக அரசு காரணமாக நாட்டில் அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று பஜாஜ் நிறுவனர் தலைவர் ராகுல் பஜாஜ் விமர்சனம் செய்துள்ளார். அவரின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று எக்கனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய விருது விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா, சுனில் பாரதி மிட்டல் ஆகிய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் அதிகாரம் படைத்த பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பஜாஜ் என்ன ஏசினார்
இதில் பஜாஜ் நிறுவன தலைவர் ராகுல் பஜாஜ் பேசியதுதான் தற்போது வைரலாகி உள்ளது. ராகுல் பஜாஜ் தனது பேச்சில், எங்கள் கார்ப்பரேட் துறையில் யாருக்கும் அரசுக்கு எதிராக பேசுவது இல்லை. பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. ஆனால் அரசுக்கு எதிராக யாரும் பேசுவது கிடையாது. அவர்களுக்கு எல்லாம் அச்சம்.

எதிர்ப்பு
ஆம் அரசுக்கு எதிராக பேசினால், பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர்களை விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. பாஜகவை பார்த்தால் பயமாக இருக்கிறது.

பயம் தான்
எல்லோரிடமும் இந்த அச்சம் இருக்கிறது. மக்கள் பயத்தோடு வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் இதை சொல்ல கூட அச்சப்படுகிறார்கள். பிரக்யா தாக்கூர் போன்றவர்கள் லோக்சபாவில் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் அவர் பாதுகாப்பு கமிட்டியில் இருப்பது எல்லாம் அதிர்ச்சி தருகிறது, என்றது குறிப்பிட்டார்.

என்ன பாகில்
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் அப்படி பயப்பட கூடிய சூழ்நிலை எதுவும் நிலவவில்லை. மக்களை எங்களை விமர்சனம் செய்கிறார்கள். பலர் எங்களுக்கு எதிராக கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். நாங்கள் அவர்களை எல்லாம் எதுவும் செய்யவில்லையே.

அமித் ஷா பதில்
சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் மாற்றலாம். மக்கள் இப்போது இருக்கும் ஆட்சியை விரும்புகிறீர்கள். பிரக்யா தாக்கூருக்கு எதிராக பிரதமரும், நானும் கடுமையாக பேசி இருக்கிறோம். அவரும் அவரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார், என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

பலர் வைரல்
இந்த நிலையில் ராகுல் பஜாஜுக்கு எதிராக பாஜகவினர் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவரை கிண்டல் செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள். ராகுல் பஜாஜுக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications