எல்லாம் முடிஞ்சு போட்டு பிரதமரே.. கர்மா காத்திருக்கிறது.. மோடி மீது ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி விமர்சித்ததற்கு தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி விமர்சித்ததற்கு தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை அவர் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். அவரின் நேற்றைய பிரச்சாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி என்ன சொன்னார்
உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்தில் பேசிய மோடி, என் மீது ராகுல் காந்தி சொல்லும் புகார்களை நிரூபிக்க முடியாது. இந்த புகார்கள், அவருக்குத்தான் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நான் அவரை போல பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. ஆனால் அது உண்மையில்லை.

பலர் எதிர்ப்பு
ராஜீவை மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். மோடியின் இந்த பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடி இவ்வளவு தரக்குறைவாக மரணம் அடைந்த ஒரு பிரதமர் குறித்து பேச கூடாது என்று கூறி வருகிறார்கள்.
|
என்ன டிவிட்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், மோடி ஜி, இந்த போர் முடிந்துவிட்டது. உங்களுக்காக கர்மா காத்துக் கொண்டு இருக்கிறது. உங்களை பற்றிய உங்களது சொந்த கருத்துக்களை என் அப்பா மீது திணிக்கிறீர்கள், அது உங்களை எப்போதும் காக்க போவதில்லை. உங்களுக்கு என் அன்புகள்.. என்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.
|
பதில்
ராகுல் காந்தியின் இந்த டிவிட்டிற்கு பலர் பதில் அளித்து வருகிறார்கள். கோபத்திலும் ராகுல் நிதானமாக பேசுகிறார் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications