"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்த கோப்புகளை வைத்து கொண்டு கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் , பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து நேற்று காரசாரமான விவாதம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்விகளை கேட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.
20 நிமிடங்கள் ரபேல் குறித்து ராகுல் பேசிய போது, ரபேல் குறித்து பிரதமருடன் நேருக்கு நேர் விவாதிக்க விரும்புகிறேன். அருண் ஜேட்லி லோக்சபாவில் பேசியபோது காங்கிரஸ் கட்சியினர் 1600 கோடி குறித்தே பேசி வருகின்றனர். இது ரூ. 58,000 கோடி ஒபபந்தம் என்று கூறியுள்ளார். நீங்கள் ரூ. 58 ஆயிரம் கோடியை 36-ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும். எனவே இது ரூ.1600 கோடி என மோடி அரசுதான் சொல்கிறது.

ராணேவிடம்
கோவா அமைச்சர் விஸ்வஜித் ராணே மற்றொருவருடன் பேசுவது போல் ஒரு ஆடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதில் கடந்த வாரம் கோவா சட்டசபை கூட்டத்தில் ராணே கூறுகையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தான் தங்கியுள்ள பிளாட்டில் படுக்கை அறையில் வைத்துள்ளதாக பாரிக்கர் தெரிவித்துள்ளதாக ராணே மற்றொருவரிடம் கூறியுள்ளார்.

பரபரப்பு
ரபேல் விவகாரம் குறித்த கோப்புகளை தன் படுக்கை அறையில் வைத்துள்ள பாரிக்கர் பணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருகிறார் என ராகுல் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
மறுப்பு
அதிலும் ரபேல் விமான ஒப்பந்தத்தை விட இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. அந்த ஆடியோவை பிளே செய்ய ராகுல், சபாநாயகரிடம் அனுமதி கோரியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
|
விமானம்
ராகுலின் குற்றச்சாட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடம் கூட விமானங்களுக்கு இருவேறு விலைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பயணம் செய்யும் விமானங்களுக்கு ஒரு விலையும் போரில் ஈடுபடும் விமானங்களுக்கு ஒரு விலையும் இருக்கும். இரு ரக விமானங்களையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னர் ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளது என கூறுமாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications