அடேங்கப்பா.. மோடி ஆட்சியில் 942 இடங்களில் குண்டுவெடிப்பு.. ராகுல் காந்தி டிவீட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியில் 942 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவங்களோ அல்லது பெரிய தீவிரவாத சம்பவங்களோ நடைபெறவில்லை என்று கூறினார். அதோடு விமானி அபிநந்தனை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைக்காமல் இருந்திருந்தால், அந்நாட்டின் நிலைமை என்ன ஆகியிருக்கும் தெரியுமா? என்று கேள்வி எழுப்பியவர் இந்தியா அணுகுண்டு வைத்திருப்பது என்ன தீபாவளிக்கு வெடி வெடிப்பதற்கா? என்றெல்லாம் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரச்சாரம் செய்தார்.

Rahul Tweets on bomb blasts in the country since 2014

இந்நிலையில் மகாராஸ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் அந்த வாகனத்தின்மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் வீரமரணம் அடைந்தனர். அந்த வாகனத்தை ஊட்டி சென்ற டிரைவரும் கொல்லப்பட்டார். ஆக மொத்தம் 16 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. பிரதமர் மோடி உட்பட முக்கியத் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி "2014ஆம் ஆண்டிலிருந்து புல்வாமா, பதன்கோட், உரி, கட்சிரோலி உள்ளிட்ட பல முக்கியக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 942 முக்கியக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பிரதமர் மோடி இவற்றை காது கொடுத்து கேட்க வேண்டும். கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக நாட்டில் குண்டு வெடிப்பே நடக்கவில்லை என்ற பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் விதமாக டிவிட்டரில் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் யாராவது அவருக்கு கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் நடந்த இத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் ஞாபகப்படுத்துங்களேன் என்று இதுவரை நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் பட்டியலையே டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் ராகுல்காந்தி 2014 முதல் நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கையை டிவிட்டரில் வெளியிட்டு இந்த குண்டு வெடிப்புகளின் சத்தத்தை பிரதமர் மோடி காத்து கொடுத்து கேட்க வேண்டும். இந்த மோசமான சம்பவங்களை கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+