Railway: பட்ஜெட் 2026-27: எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.. சலுகை எதுவுமே இல்லையே.. ரயில் பயணிகள் அப்செட்
சென்னை: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வேக்கு ரூ.2,93,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி என்றாலும், பயணிகள் பலரும் எதிர்பார்த்தைவகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை.
குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்படுமா, எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
2026 - 27 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2047-ம் ஆண்டிற்குள் "வளர்ந்த இந்தியா" என்ற இலக்கை எட்டும் வகையில், ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

ரயில்வேக்கு என்னென்ன அறிவிப்புகள்
2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கும் நிதி ஒதுக்கீடுகள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வேக்கும் சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். ரயில்வேயை பொறுத்தவரை பயணிகளிடம் நீண்ட காலமாக உள்ள எதிர்பார்ப்பு என்னவென்றால் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைதான்.
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை இல்லை
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரானா காலத்திற்கு முன்பு வரை ரயில்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை இருந்தது. ஆண்களுக்கு 40 சதவீதமும் பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து இந்தக் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது.
தற்போது ரயில்வேயின் வருவாய் முன்பை விட அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில், இந்த கட்டண சலுகை மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே நிலவியது. மருத்துவம், ஆன்மீகம் போன்ற காரனங்களுக்காக ரயில்சேவையை பெரிதும் பயன்படுத்தும் கோடிக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் இன்றைய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
கவாச் தொழில் நுட்பம்
அதேபோல, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மற்றும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கவாச் தொழில் நுட்பம் விரிவுபடுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மற்றொன்று பயணிகள் எதிர்பார்பார்க்கும் மிக முக்கியமான சலுகை என்னவென்றால் ரயில்களில் பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என்பது தான். பண்டிகை காலங்கலில் ரயில்களில் பொதுப் பெட்டிகளில் மூச்சுத்திணறும் அளவுக்கு பயணிகள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் பற்றிய அறிவிப்பு இருக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவியது.
ஏமாற்றமே மிச்சம்
ஆனால் இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய ரயில்வேக்கு ரூ.2,93,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதியாகும். ஹைதராபாத் - சென்னை மற்றும் சென்னை - பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் வெளியானாலும், பயணிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் வரவில்லை என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications