டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகிறது. மதுரை லோக்சபா தொகுதி எம்.பி. வெங்கடேசன் எழுப்பியுள்ள கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

OPS holds disucuss with supporters in AIADMK Headquarters

அமைச்சர் அளித்துள்ள பதிலில், பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டண வசூல் இல்லை என்று தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வுகர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது. புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

English summary
Construction of a new railway line in Tamil Nadu is on hold. Union Railway Minister Piyush Goyal has said that no new works will be started on the railways till the end of this financial year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X