'ரயில்வே' என்கிற வார்த்தையே இல்லாமல்.. பட்ஜெட்டை வாசித்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாசித்த பட்ஜெட் உரையில், 'ரயில்வே' என்கிற வார்த்தையே இல்லாமல் இருக்கிறது. இது எதிர்க்கட்சிகளிடையே கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் 4வது மிகப்பெரிய ரயில்வேயாக இருக்கும் இந்தியன் ரயில்வே, ஒவ்வொரு நாளும் இந்தியன் ரயில்வே சுமார் 13,000 பயணிகள் ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு தோராயமாக 2.4 கோடி பேர் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த சென்னை மக்கள் தொகையை விட அதிகமாகும். ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 41 கோடி பேர் ரயில்களில் பயணிக்கின்றனர்.

ரயில்களின் தேவை ஒருபுறம் எனில், ரயில்வே பாதுகாப்பு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. ஒடிசா, ஆந்திராவில் நடந்த விபத்துக்கள், சென்னைக்கு அருகே நடந்த ரயில் விபத்துகள் ரயில்வே துறையின் பாதுகாப்பு மீது கேள்வி எழுப்பியிருக்கிறது. ஆண்டுதோறும் ரயில்வே துறையிலிருந்து 50,000 பேர் பணி ஓய்வு பெறுவதால் இப்போது ரயில்வே துறையில் சுமார் 1.72 லட்சம் காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதில் தண்டவாள பராமரிப்புக்கு 87,000 பேரும், ஸ்டேஷன் மாஸ்டராக 64,000 பேரும், லோகோ பைலட்டுகளாக 10,000 பேரும், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15,000 பேரும் தேவைப்படுகின்றனர்.
ஆனால் போதுமான ஆட்கள் இல்லாததால் தொழில்நுட்ப கோளாறுகள் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. ஆண்டுக்கு 200 சிக்னல்கள் தோராயமாக பழுதாகின்றன. இதில் 100 சரி செய்ய மட்டுமே போதுமான ஆட்கள் நம்மிடம் இருக்கிறார்கள். மீதி 100 சரி செய்ய முடியாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிக்னல்கள் போன்று தண்டவாளங்களும் உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
ரயில்வேயின் தங்க நாற்கர சாலை என சென்னை-மும்பை-ஹவுரா-டெல்லி வழித்தடத்தை கூறலாம். அந்த அளவுக்கு ரயில்களின் இயக்கம் இந்த வழித்தடத்தில் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதே ஆளவுக்கு பராமரிப்பு இருக்கிறதா? என்று கேட்டால் அரசிடம் பதில் இல்லை. நாடு முழுவதும் 10,000 நீளத்திற்கான தண்டவாளங்கள் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கத்தினர் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் ரயில்வே குறித்து பேசாதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் என்னென்ன?:
1.மதுரை-கன்னியாகுமரியில் இருவழிப்பாதை
2.சேலம்-தருமபுரி வழி: ஓமலூர் வழித்தடத்தில் இருவழிப்பாதை
3.சென்னையின் அடுத்த முனையமாக ஆவடி அல்லது திருவள்ளூர்
ஆகிய மூன்று திட்டங்களுக்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருக்கிறது. குறிப்பாக மதுரை-கன்னியாகுமரியில் இருவழிப்பாதை குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடம், மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள், புல்லட் ரயில்கள் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனாலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. போக்குவரத்து என்பதை தாண்டி இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக ரயில்வே துறை இருக்கிறது. ஆனால் இது குறித்து அறிவிப்பு வெளியாகாதது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications