பிளான் நம்பர் 12.. அதிரடியாக இறங்கும் வந்தே மெட்ரோ.. பெரிதாக திட்டமிடும் ரயில்வே! முதலில் எந்த ரூட்?
டெல்லி: வந்தே பாரத் வெற்றியைத் தொடர்ந்து வந்தே மெட்ரோவை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரயில்வேவை தினசரி பல லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இந்திய ரயில்களில் அதிநவீன வசதிகள் இல்லை என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருந்தது.

வந்தே பாரத்: அந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது தான் வந்தே பாரத். நமது நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் மிகப் பெரியளவில் ஹிட் அடித்தன. இப்போது பல ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கோடைக் காலங்களில் இந்த வந்தே பாரத் தான் நமக்குப் பெரியளவில் உதவுகின்றன.
இதற்கிடையே அடுத்த கட்டமாக இந்திய ரயில்வே, வந்தே மெட்ரோவை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது புறநகர்ப் பகுதிகளில் இருந்து முக்கிய நகரத்திற்கு வரும் பயணத்தை எளிமையாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் ஜூலை மாதம் முதல் இதற்கான சோதனை ஓட்டத்தைத் தொடங்க என்றும் இதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடந்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எப்போது: சோதனை ஓட்டத்தை மிக விரைவாக முடித்து வந்தே மெட்ரோவை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. நகரவாசிகளின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வந்தே மெட்ரோ பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். ரயில் ஸ்பீடை அதிவேகமாக அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் தொழில்நுட்பத்தை இது கொண்டதாக இருக்கும். அப்போது தான் குறைந்த நேரத்தில் அதிக நிறுத்தங்களில் நின்று செல்ல முடியும்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "இந்தாண்டு இறுதிக்குள் இந்த வந்தே மெட்ரோவை கொண்டு வர முயல்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் சோதனை தொடங்கும். தானியங்கி கதவுகள் தொடங்கி இதில் பல அட்டகாசமான வசதிகள் இருக்கும். தற்போது நகருக்குள் ஓடும் மெட்ரோ வசதிகளைக் காட்டிலும் இதில் கூடுதலாக வசதிகள் இருக்கும். வந்தே மெட்ரோ படங்களை விரைவில் வெளியிட உள்ளோம்" என்றார்.
பிளான் 12: இந்த வந்தே மெட்ரோ ஒரு தனித்துவமான கோச் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஒரு வந்தே மெட்ரோவில் மொத்தம் 3 யூனிட்கள் இருக்கும். ஒரு யூனிட் என்து 4 பெட்டிகளைக் கொண்டதாகும். அதாவது ஒரு வந்தே மெட்ரோ என்பது குறைந்தபட்சம் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். தொடக்கத்தில் அனைத்து ரூட்களிலும் 12 பெட்டிகளைக் கொண்ட வந்தே மெட்ரோ இயக்கப்படும். தேவைப்பட்டால் 16 பெட்டிகளாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எந்த ரூட்: முதலில் எந்த ரூட்டில் வந்தே மெட்ரோ வரும் என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம், இருப்பினும், டெல்லி ரேவாரி ரூட்டில் முதல் வந்தே மெட்ரோ இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவை தவிர லக்னோ- கான்பூர், அக்ரா- மதுரா, புவனேஷ்வர்- பாலசோர், திருப்பதி- சென்னை ஆகிய ரூட்களிலும் வந்தே மெட்ரோவை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மெட்ரோவை போல இதற்குத் தனியாக தண்டவாளங்கள் அமைக்க தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் தண்டவாளங்களிலேயே இந்த வந்தே மெட்ரோவை இயக்க முடியும். இதன் முக்கிய நோக்கமே புறநகர் பகுதிகளில் இருந்து மக்களை நகர்ப்புறத்திற்கு எடுத்து வருவது தான் என்பதால் இதில் முன்பதிவில்லாத பயணிகளே அதிகம் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications