Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா பாணியில் கெலாட்- பைலட் இணைந்து ராஜஸ்தான் தேர்தலை எதிர்கொள்ள ஒப்புதல்- காங்.ஹேப்பி அண்ணாச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகா பாணியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் மேலிடம் மகிழ்ச்சி அடைந்துள்ள்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களுக்கான வியூகங்கள் வகுப்பதில் பாஜக, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகின்றன. டெல்லியில் இரு கட்சித் தலைவர்களும் மாநிலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Rajasthan: Ashok Gehlot, Sachin Pilot agree to fight Assembly Election unitedly

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இருவரிடமும் தனித்தனியாகவும் பின்னர் கூட்டாகவும் ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலை இணைந்து எதிர்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது கர்நாடகா பாணியில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது காங்கிரஸ் மேலிடத்தின் வியூகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸில் தலைவர்களிடையே உட்கட்சி மோதல்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களின் தலைவர்களை அழைத்து பேசி இருவரையும் சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி இணைந்தே தேர்தலை எதிர்கொள்ள வைப்பதுதான் காங்கிரஸ் வியூகம்.

கர்நாடகாவில் சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகிய இரு தலைவர்களிடையே இணக்கமான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு தேர்தல் பிரசாரம், வேட்பாளர் தேர்வு என ஒவ்வொன்றிலும் இணக்கத்தை உருவாக்கியது. இதனால் தேர்தலில் அமோக வெற்றியையும் அறுவடை செய்தது. இதன்பின்னரும் கூட முதல்வர் யார்? என்பதில் இழுபறி நீடித்தது. யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதிலும் குழப்பம் இருந்தது. எல்லாவற்றுக்கும் காங்கிரஸ் மேலிடம் இப்போது தீர்வு கண்டுவிட்டது. இதே பாணியைத்தான் கோஷ்டி பூசல் நிலவும் மாநிலங்களும் கடைபிடிக்க விரும்புகிறது காங். மேலிடம்.

Rajasthan: Ashok Gehlot, Sachin Pilot agree to fight Assembly Election unitedly

இதனடிப்படையில் தற்போது ராஜஸ்தான் மாநில உட்கட்சி மோதல்களுக்கு தற்காலிகமாக முடிவுகட்டி இருக்கிறது காங்கிரஸ் மேலிடம் என்கின்றன டெல்லி தகவல்கள். அனேகமாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சச்சின் பைலட் நியமிக்கப்பட்டு முதல்வர் வேட்பாளராக அசோக் கெலாட் அறிவிக்கப்படலாம். அதேபோல வேட்பாளர்கள் தேர்விலும் இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடும். தேர்தலில் வென்றால் ஆட்சி அதிகாரத்திலும் இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் சம பங்களிப்பு இருக்கும் என்பது போன்ற உறுதி மொழிகள் டெல்லியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் சமாதானமாகி இருக்கின்றனர் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+