கர்நாடகா பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா? ராஜஸ்தான் முதல்வர் கெலாட்- பைலட் இடையே இன்று கார்கே பஞ்சாயத்து!
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்களிடையேயான கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கார்கே இந்த பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
கர்நாடகாவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் இரு துருவங்களாக இருந்த சித்தராமையா, டிகே சிவகுமர் ஆகியோரை ஒருங்கிணைத்து இணக்கமாக செயல்பட வைத்து வெற்றியை அறுவடை செய்தனர். முதல்வர் பதவி, அமைச்சர் பதவிகள் என ஒவ்வொன்றிலும் இரு தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை விடிய விடிய பேசி முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பக்கம் காங்கிரஸ் மேலிடம் கவனத்தை செலுத்தி உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி வருகிறார். முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவேன் எனவும் சச்சின் பைலட் மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதால் மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது. இதனால் இரு தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. டெல்லியில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறார் கார்கே.

இதேபோல் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில தலைவர்களுடனும் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர்களிடையேயான கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் கர்நாடகா பார்முலாவை ஒர்க் அவுட் செய்து பார்ப்பதில் கார்கே தீவிரம் காட்டி வருகிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications