ராஜிவ் காந்தி 31வது நினைவுநாள்... வீர்பூமியில் சோனியா,பிரியங்கா மலர்தூவி அஞ்சலி
ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 31ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
டெல்லி: ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 31ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள வீர்பூமி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு, மே 21ம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது அன்று இரவு இந்தியாவின் புதிய பிரதமராக ராஜிவ் காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது இந்திரா காந்தியை சீக்கியர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்ததால் இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. அந்த சமயத்தில் நவம்பர் 2ஆம் தேதி ரேடியோ மூலம் இந்த வன்முறையை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பின்னர் வன்முறை சற்று அடங்கியது.
இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்டார். அவருடைய காலத்தில் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டது. மேலும் பல முக்கியமான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அவருடைய ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டன. அதே நேரத்தில் இலங்கையுடன் ராஜீவ் காந்தி செய்த ஒப்பந்தம் மிகவும் தவறான முடிவாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக தான் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

உயிரிழந்த ராஜிவ் காந்தியின் நினைவாக டெல்லியில் வீர் பூமி என்ற பெயரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. ராஜிவ் காந்தி உயிரிழந்ததன் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, வீர் பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரோடு, அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் தனது தந்தையின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்பட பலர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ராஜிவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications