ராஜீவ் கொலை வழக்கு: 6 தமிழர் விடுதலைக்கு எதிராக காங்.முறையீடு.. எரிகிற கொள்ளியால் தலையைச் சொரிகிறதா?
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 6 தமிழர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் 6 தமிழர் விடுதலையை எதிர்ப்பது அக்கட்சிக்கு மேலும் பெரும் சரிவைத்தான் தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாடாண்ட காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக கூட அமருவதற்கு போதுமான இடங்களைப் பெற முடியாத பேரழிவில்தான் இருக்கிறது. மாநில கட்சிகள் பெறும் இடங்களைவிட சொற்ப எண்ணிக்கையில் கூடுதல் இடங்களைப் பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சி என்கிற போர்வையை போர்த்திக் கொண்டு வலம் வருகிறது காங்கிரஸ்.

அதிகாரம் அம்போ
மாநிலங்களை எல்லாம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, படிப்படியாக தெளிவற்ற தலைமை, குழப்பமான தலைமை, தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர் என்கிற டெல்லி மேலிடப் போக்கால் அத்தனை மாநிலங்களிலும் அதிகாரத்தை பறிகொடுத்துவிட்டது. எஞ்சியிருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் எதுவும் நிச்சயம் கிடையாது என்பதுதான் காங்கிரஸ் கட்சி முன் நிற்கும் நிலைமை.

தென்னிந்தியாவில் காங்கிரஸ்
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் கர்நாடகாவில் பாஜகவுக்கு இணையாக, கேரளாவில் இடதுசாரிகளுக்கு இணையான வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே காங்கிரஸ் பேரியக்கத்துக்கு சவக்குழியை தமிழக வாக்காளர்கள் ஆழ தோண்டி புதைத்துவிட்டனர். ஆனால் தமிழகத்தை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக தயாவால் காங்கிரஸ் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதாக நம்பப்படுகிறது. காங்கிரஸின் லைப் லைன் அல்லது ஆக்சிஜன் பைப் என்பது திராவிட கட்சிகள்தான். திராவிட கட்சிகளின் முதுகில் ஏற முடியாமல் தமிழகத்தில் காங்கிரசால் உயிருடன் இருக்க முடியாது என்பது களநிலவரம்.

பாஜகவுடன் போட்டி போடும் காங்கிரஸ்
இத்தனை பட்டும் திருந்தவில்லை என்பதற்கேற்ப தமிழர் விரோதப் போக்கில் காங்கிரஸ் முன்னணி வகிபாகம் வகித்து வந்தது. அதனால் தமிழர் உள்ளங்களில் காங்கிரஸ் இடம்பெறவே முடியாத எட்டிக் காயாகவே இருந்துவிட்டது. காங்கிரஸுக்கு பதிலான தேசிய கட்சியான பாஜகவும் அதே பாணியை பின்பற்றியது. இதனால் தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் பாஜகவின் தாமரை மலர முடியாமல்தான் இருக்கிறது. இதனை காங்கிரஸும் நன்றாகவே அறிந்தே வைத்திருக்கிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைத்திருப்பதால்தான் அதன் சர்வைவல் என்பது சாத்தியமாக இருக்கிறது.

ராஜீவ் கொலை - விடுதலைக்கு எதிராக காங். அப்பீல்
ஆனால் இந்த சர்வைவல் அல்லது உயிர்ப்பித்தல் என்பதற்கு முடிவுரையை வலுக்கட்டாயமாக எழுதிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிப்புடன் எதிர்க்கிறது. ஆனால் பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் ஆதரிக்கிறது. பாஜக, காங்கிரஸுடன் சிபிஎம்- கட்சியும் இணைந்து உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. இப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 தமிழர் விடுதலை விவகாரம்.. இதில், 6 தமிழரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது. இதேபோல தற்போது காங்கிரஸும் அப்பீல் செய்யப் போகிறதாம். அதாவது ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக பாஜகவைப் போலவே காங்கிரஸும் அடுத்தடுத்து ஆவர்த்தனம் செய்ய தொடங்கி இருக்கிறது. இப்படி எல்லாம் செய்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு சரிசமமாக காங்கிரஸ் கட்சியும் அன்னியப்பட்டு உள்ளதையும் தொலைத்துவிட்டுப் போகிற நிலைமைதான் வரும் என்பதை சீனியர் அரசியல் பார்வையாளர்கள் இடித்துரையாக சொல்கின்றனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications