7 தமிழர் விடுதலை..முடிவு எடுக்காத ஆளுநர் பன்வாரிலால்..உச்சநீதிமன்றத்தில் பிப்.9-ல் மீண்டும் விசாரணை
டெல்லி: 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் முடிவு எடுக்காத நிலையில் வரும் 9-ந் தேதி இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசு நிலைப்பாடு. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை 3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.

இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் ஆளுநர் தரப்பில் பல்வேறு விளக்கங்கள்தான் தரப்பட்டன. உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது. 12 நாட்களில் ஆளுநர் முடிவெடுத்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுபிடி காட்டியது.
ஆனாலும் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று மட்டும் கூறியிருந்தார்.
இந்நிலையில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பிப்.9-ந் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்குமா? என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications