ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.. என்ன பிரச்சனை?
டெல்லி: கடந்த 2 நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் எதற்காக மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை பெற்றார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இந்நிலையில் தான் கடந்த 11ம் தேதி ராஜ்நாத் சிங் திடீரென்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்நாத் சிங்கிற்கு நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கீழ் செயல்படும் பழைய தனியார் வார்டில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு ராஜ்நாத் சிங் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் எதற்காக 2 நாட்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜ்நாத் சிங்கிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று மதியம் வீடு திரும்பி உள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊடகப்பிரிவு பொறுப்பாளரான டாக்டர் ரிமா தாதா கூறுகையில், ‛‛ ராஜ்நாத் சிங் முதுகுவலிக்கு சிகிச்சை பெற்றார். இன்று மதியம் 2 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளார். இதனால் ராஜ்நாத் சிங்கின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications