டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவுடன் இணைய போராடப் போகும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்: ராஜ்நாத்சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவதற்காக விரைவில் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்ச ராஜ்நாத்சிங் கூறியுளாள்ர்.

கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் நாடு முழுவதும் பாஜகவினரிடையே அக்கட்சித் தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி வருகின்றனர். ஒடிஷா, மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

Rajnath Singh hints on PoK- Fate of kashmir will change

இதேபோல் மகாராஷ்டிரா பாஜகவினர் மத்தியில் ராஜ்நாத்சிங் ஏற்கனவே பேசியிருந்தார். தற்போது ஜம்மு காஷ்மீர் பாஜக தொண்டர்களிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:

தேசத்தின் கவுரவத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்பதை எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக்க விரும்புகிறோம். சீனாவுடன் ராணுவம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க சீனாவும் கூட விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த விவரங்கள் அனைத்துமே நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து விரைவில் கோரிக்கை வைப்பார்கள். பாகிஸ்தான் ஆட்சியை நிராகரித்து இந்தியாவுடன் சேருகிறோம் என்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் முழக்கமிடுவார்கள்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அதிமுக எம்.எல்.ஏ.பழனி... நலம் விசாரித்த முதலமைச்சர்கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அதிமுக எம்.எல்.ஏ.பழனி... நலம் விசாரித்த முதலமைச்சர்

அதற்கான காலம் வரும். அப்போது ஜம்மு காஷ்மீரின் நிலைமையே மாறும். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்கிற நிலை விரைவில் மாறும். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடு என்ற பெருமையை பெற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

English summary
Defence minister Rajnath Singh said that the fate and picture of Jammu and Kashmir will change in the years to come under PM Modi’s leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X