பாங்கோங் ஏரி பக்கம்தான் படைகள் வாபஸ்.. பிங்கர் 6-ல் சீன ராணுவம் நிற்கிறது.. ராஜ்நாத் சிங் தகவல்
டெல்லி: சீனப் படைகள், பிங்கர் 8 உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. அதை இந்திய ராணுவம் தடுத்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவ வீரர்களும் பல மாதங்களாக அங்கேயே குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவியது. இந்த நிலையில் ராணுவ மட்டத்தில் 9 சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதன் பிறகு பாங்கோங் ஏரி பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளது. இதை ராஜ்யசபாவில் இன்று, ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தினார்.
அதேநேரம், பாங்கோங் ஏரியின் வடக்கில் உள்ள பிங்கர் 6 பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து நிற்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதே போல, பிங்கர் 3 பகுதியில் இந்தியா தனது நிரந்தர தளத்தில் தொடர்ந்து ராணுவத்தை நிலை நிறுத்தும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இரு தரப்புக்கும் பரஸ்பரம் ஒப்பந்தம் ஏற்படும் வரை, இணைந்த ரோந்துப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications