ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு.. 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பங்கேற்க உள்ளார்.

இம்மாநாட்டில் பங்கேற்க 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங். இதற்காக புதன்கிழமையன்று மாஸ்கோ புறப்படுகிறார் ராஜ்நாத்சிங்.
லடாக் எல்லையில் சீனா ஊடுருவல் முயற்சிகளை இந்தியா இடைவிடாது முறியடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜ்நாத்சிங்கின் மாஸ்கோ பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications