பாகிஸ்தானுக்கு சம்பவம் இருக்கு! முப்படை தளபதிகளை சந்தித்தார் ராஜ்நாத் சிங்!
டெல்லி: பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை தொடங்கியிருக்கும் நிலையில், இந்தியா தீவிரமாக பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் முப்படைகளின் தளபதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திருக்கிறார்.
இந்த சந்திப்பில், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு தாக்குதலை தொடங்கியது. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முதலில் ஜம்மு காஷ்மீர் மீது தொடங்கிய இந்த தாக்குதல் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகிறது. தாக்குதலை இந்தியா சிறப்பாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ் 600 வான் தடுப்பு சாதனம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
8 பெரிய ஏவுகணைகள் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் வீசியிருந்தது. இவை அனைத்தையும் இந்தியா முறியடித்துள்ளது. இருப்பினும் ட்ரோன்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் நோக்கி திருப்பியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை வீசியிருக்கிறது. இது அப்பட்டமான போர் விதி மீறல். எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி மற்றும் லாகூரை குறி வைத்திருக்கிறது. எல்லையில் இரு தரப்பினருக்கும் இடைய கடுமையான துப்பாக்கிச்சண்டை மற்றும் பீரங்கி தாக்குதல் நடைபெற்றிருக்கின்றன. இந்நிலையில்தான் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகளை தற்போது சந்தித்திருக்கறார்.
டெல்லி பிரதமர் அலுவலத்தில் உள்ள சவுத் பிளாக் பகுதியில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிப்பாதி, ராணுவ ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி மார்ஷல் ஏபி சிங் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதாவது பாகிஸ்தான் இந்த தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்தறை செயலாளர் ரூபியோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்த்கது.












Click it and Unblock the Notifications