"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி
டெல்லி: கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்பது போலப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருந்த சூழலில், அதற்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தான் சுக்கு நூறாகப் போய்விடும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், வங்கதேசம் சுதந்திரம் பெற்ற வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தேவையே இல்லாமல் இந்தியா பற்றிப் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தொடர்ந்து இந்தியா குறித்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட எதிர்காலத்தில் எதாவது மோதல் ஏற்பட்டால் கொல்கத்தாவைத் தாக்குவோம் என வாயை விட்டு இருந்தார்.

ராஜ்நாத் சிங்
இதற்கிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்த (வங்கதேச சுதந்திரத்தைச் சொல்கிறார்) வரலாற்றைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று பாகிஸ்தானை அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இது போன்ற கருத்துகளைச் சொல்லி இருக்கக்கூடாது. 55 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தபோது அவர்கள் அதன் விளைவுகளை அனுபவித்தனர். மீண்டும் எங்கள் மண் மீது எதாவது செய்ய அவர்கள் முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்பது கடவுளுக்கே தெரியும்" என்றும் அவர் நேரடியாக எச்சரித்தார்.
பதிலடி
பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தேவையில்லாமல் இந்தியா பற்றிப் பேசி, கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் எனக் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே ராஜ்நாத் சிங் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஆசிப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாயை விட்ட பாகிஸ்தான்
கடந்த சனிக்கிழமை சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், எதிர்காலத்தில் இந்தியா எதாவது பதற்றத்தை ஏற்படுத்தினால் பதற்றத்திற்கும் பாகிஸ்தான் வலுவான பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், கொல்கத்தா மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா மீது அவர் ஆதாரமே இல்லாத சில தகவல்களையும் குறிப்பிட்டார்.
அதாவது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை வைத்து போலியாகப் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது போல ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு, அதை வைத்து இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை ஆரம்பிக்கலாம் என அவர் கூறியிருந்தார். இதை எல்லாம் பாகிஸ்தான் தான் செய்யும். ஆனால், அவர் இந்தியா மீது குற்றஞ்சாட்டினார். இப்படி வாய்க்கு வந்ததைப் பேசினாலும் அவர் அதற்கான ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
பஹல்காம் மோதல்
கடந்தாண்டு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தானின் உள்ளே சென்று தீவிரவாத முகாம்களை அழித்தது. இதைப் பொறுக்காமல் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுத்தோம். இதனால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் சரணடைய ஓடி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications