Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் ஜேபி நட்டா- காங்கிரஸை விட்டு ஓடிவந்த அசோக் சவானுக்கும் பதவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானும் ராஜ்யசபா எம்பியாக்கப்படுகிறார்.

நாட்டின் 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் ஏப்ரலில் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த 56 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். 15 மாநிலங்களில் 56 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15.

Rajya Sabha Election 2024: BJP fields JP Nadda, Ashok Chavan from Gujarat, Maharashtra


சோனியா காந்தி: ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நாளை முடிவடையும் நிலையில் இன்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிறார். அமேதி, ரேபரலி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு 5 முறை லோக்சபா எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி தற்போது ராஜ்யசபா எம்பியாகிறார். இதற்கான வேட்புமனுவை சோனியா காந்தி இன்று ராஜஸ்தான் சட்டசபை வளாகத்தில் தாக்கல் செய்தார்.

எல்.முருகன்: பாஜகவும் அடுத்தடுத்து ராஜ்யசபா வேட்பாளர் பெயர்களை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் 2021-ல் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்கான களப் பணிகளை எல்.முருகனும் பாஜக மேலிடமும் செய்து வந்தது. இந்த நிலையில் திடீரென எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஷாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிறார். ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜகவின் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய பாஜக அரசை பல்வேறு வகைகளில் ஏற்கனவே ஆதரித்து வரும் பிஜூ ஜனதா தளம், லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

ஜேபி நட்டா: இதனைத் தொடர்ந்து பாஜக வெளியிட்ட மற்றொரு வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியின் அகில் இந்திய தலைவர் ஜேபி நட்டா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் (அசோக் சவான்) உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குஜராத் மாநிலத்தில் இருந்து ஜேபி நட்டா ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

அசோக் சவான்: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது மகாராஷ்டிராவில் இருந்து அசோக் சவான், ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

மொத்தம் 56 இடங்களுக்கு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் 6 கட்சிகளை சேர்ந்த 29 பேர் போட்டியின்றி எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எஞ்சிய இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 15 (நாளை) மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+