பேருக்குதான் கூட்டத்தொடரா? சி.பி.ராதாகிருஷ்ணனை நோக்கி எழுந்த கேள்வி! மாநிலங்களவையில் சலசலப்பு!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று ஒரே ஒரு கேபினட் அமைச்சர் கூட இல்லாததால், குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நோக்கி எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், அவையில் ஒரு கேபினட் அமைச்சர் கூட இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது சபைக்கு இழைக்கப்பட்ட அவமானம் எனக் கூறி, உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்த சிக்கல் குறித்து அரசாங்கத்திடம் விவாதிப்பதாக சபாநாயகர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். மூத்த அமைச்சர் ஒருவரை வரவழைக்குமாறு ஒரு இளநிலை அமைச்சரை அவர் அறிவுறுத்தினார். "நடைமுறைகள் எனக்குத் தெரியும். அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சர்களில் ஒருவர் வர வேண்டும்" என ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் உடனடியாக அமைச்சர் யாரும் வரவில்லை.
எனவே டென்ஷன் ஆன எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் வரும் வரை அவை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். "இது அவைக்கு அவமானம். கேபினட் அமைச்சர் வரும் வரை அவையை ஒத்திவைக்க வேண்டும்" என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.
ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகும் அமைச்சர் யாரும் அவைக்கு வராததால், சி.பி. ராதாகிருஷ்ணன் அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications