ராமர் என்றால் நீதி அவர் ஒரு போதும் அநீதியில் தோன்ற முடியாது - ட்விட்டரில் பதிவிட்ட ராகுல்காந்தி
ராமர் என்றால் நீதி அவர் ஒரு போதும் அநீதியில் தோன்ற முடியாது என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக வரலாற்று சிறப்பு மிக்க பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் பகவான் ராமர் பற்றியும் அவரது குண நலன்களை குறிப்பிட்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி முதல் செங்கல் எடுத்து கொடுத்து விழாவை தொடங்கி வைத்தார். ராமர் கோவில் பூமி பூஜை விழா பற்றி அரசியல் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமர் என்பவர் எப்படிப்பட்டவர் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

சிறப்பான மனித குணங்களைக் கொண்டவர் ராமர் அவரது குண நலன்களை நாம் ஆழமாக நமது மனதில் பொருத்தி பார்க்க வேண்டும்.

ராமர் என்றால் அன்பு அவர் ஒரு போதும் வெறுப்பில் தோன்ற முடியாது. ராமர் என்றால் கருணை அது ஒருபோதும் கொடூரமாக தோன்ற முடியாது. ராமர் என்றால் நீதி அவர் ஒரு போதும் அநீதியில் தோன்ற முடியாது என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications