பிரதமர் மோடி கேபினட்டிலேயே இளம் அமைச்சர்.. 3 முறை எம்பி.. யார் இந்த ராம் மோகன் நாயுடு?
டெல்லி: பிரதமர் மோடி உள்பட 72 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் மோடி அமைச்சரவையில் இதுவரை பதவியேற்ற கேபினட் அமைச்சர்களில் ராம் மோகன் நாயுடுதான் இளம் அமைச்சர் ஆவார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை வென்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பாஜகவிற்கு கிடைக்கவில்லை. 240 இடங்களில் மட்டுமே பாஜக வென்றதால் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது.

இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை பிடித்தது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியை சந்தித்து ஆசி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மாலை 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்றார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், நேபாள பிரதமர் பிரசந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, மொரீஷியஸ் அதிபர் பிரவிந்த் குமார் ஜெகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோபே ஆகிய 7 நாட்டு தலைவர்கள் பதவியேற்றனர். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் சாகர் திட்டத்தின் அடிப்படையில் இந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மோடி பதவியேற்றதை அடுத்து அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்படி, பாஜக தேசிய தலைவரான ஜேபி நட்டாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதேபோல் முன்னாள் முதல்வர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், குமாரசாமி உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடுவும் அமைச்சராக பதவியேற்றார்.
மோடி அமைச்சரவையில் இதுவரை பதவியேற்ற கேபினட் அமைச்சர்களில் ராம் மோகன் நாயுடுதான் இளம் அமைச்சர் ஆவார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ண நாயுடுவின் மகன் இவர் ஆவார் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிடும் போது ராம் மோகன் நாயுடுவுக்கு 26 வயதுதான். டெல்லியில் பள்ளி படிப்பையும் அமெரிக்காவில் எம்பிஏவும் முடித்துள்ள ராம் மோகன் நாயுடு முடித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறந்து பணியாற்றியதாக 2020 ஆம் ஆண்டு சன்சட் ரத்னா விருது பெற்றார். நடாளுமன்றத்தில் வேளாண்மை , உணவு பதப்படுத்துதல், ரயில்வே, உள்துறை ஆகிய துறைகளின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.












Click it and Unblock the Notifications