ராம நவமி நாள் வகுப்புவாத மோதல்கள் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: ராம நவமி நாளில் நாட்டின் பல மாநிலங்களில் நிகழ்ந்த வகுப்புவாத மோதல்கள் குறித்து நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அண்மையில் ராமநவமி நாள் நிகழ்வுகளின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. இந்த மதமோதல்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தமது மனுவில், அண்மையில் டெல்லி, குஜராத், ம.பி, உ.பி. மோதல்களை குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லியில் புல்டோசர் மூலம் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகையால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இம்மனு இன்று நீதிபதி எல்.என்.ராவ் பெஞ்ச் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தகைய மனுக்களை ஏற்க முடியாது என கூறி பொதுநலன் மனுவை நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications