இந்திய வானில் தெரிந்த அதிசயம்! ஆபத்து என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! மக்களே உஷார்
ஸ்ரீநகர்: வழக்கமாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற துருவ பகுதிகளில்தான் அரோரா எனும் அதிசயம் தெரியும். ஆனால் முதல் முறையாக இந்தியாவில் லடாக்கில் அரோரா தென்பட்டிருக்கிறது. இது அதிசயமாக இருந்தாலும், ஆபத்தான விஷயம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரியனிலிருந்து ஒளி கதிர்கள் வெடித்து கிளம்பும். இதனை சூரிய வெடிப்பு என்று சொல்வார்கள். இது பூமியை நோக்கி வரும் போது, காந்த புயல்களை உருவாக்குகின்றன. இதனால் செயற்கைக்கோள்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு மே மாதம் லடாக்கின் இமயமலை வானத்தில் அரோரா ஒளிகள் தென்பட்டன. வழக்கமாக துருவ பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த ஒளிகள், அங்கு தோன்றியது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதுபற்றி கூறுகையில், "சூரிய வெடிப்புகளால் இந்த அரோரா நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சூரிய வெடிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலிமையானதாக இருந்தது" என கூறியுள்ளனர்.
சூரிய வெடிப்புகளின் தனித்துவம்
சூரிய வெடிப்பை விஞ்ஞானிகள், 'கொரன் மாஸ் எஜக்ஷன்' என கூறுகிறார்கள். அதாவது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து வெளியேறும் காந்த பிளாஸ்மாவின் பெரிய குமிழிகள் வெடித்து, சூரிய வெடிப்பு உருவாகிறது. கடந்த ஆண்டு மே 10ம் தேதி, நிகழ்ந்த சூரிய வெடிப்பு, ஆறு இணைந்த 'கொரன் மாஸ் எஜக்ஷனின்' தனித்துவமான வரிசையாக இருந்தது.
இந்த நிகழ்வின் தாக்கத்தை ஆராய, நாசா மற்றும் ESA விண்வெளி ஆய்வகங்களின் தரவுகளை இந்திய வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். லடாக்கின் ஹன்லேவில் உள்ள ஆய்வகத்தில், சூரிய புயல்களின் பாதையை கண்காணிக்க மேம்பட்ட மாதிரிகள் உருவாக்கப்பட்டன.
வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள்
மாதிரிகளை ஆய்வு செய்ததில், பல சூரிய வெடிப்புகளின் தொடர்ச்சியான வெப்பநிலை விவரங்களை வெளிப்படுத்தியது. "ஆரம்பத்தில் 'கொரோனா மாஸ் எஜக்ஷன்' வெப்பத்தை வெளியிட்டன. ஆனால், பின்னர் அவை வெப்பத்தை உறிஞ்சவும் தக்கவைக்கவும் தொடங்கின" என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பூமிக்கு அருகிலுள்ள நாசாவின் 'விண்ட்' விண்கலம், இறுதிக் கட்ட சூரிய மேகத்தின் இரட்டை காந்த கட்டமைப்புகளை கண்டறிந்தது. இதுதான் லடாக்கில் காணப்பட்ட அரோரா ஒளிகளுக்கு காரணமாக அமைந்தன.
விண்வெளி வானிலை முன்னறிவிப்பு
இந்த ஆராய்ச்சி விண்வெளி வானிலை முன்னறிவிப்பில் புதிய எல்லைகளுக்கு நம்மை கொண்டு சென்றிருக்கிறது. இந்தியாவின் ஆதித்யா-எல்1 மூலம் பெறப்படும் தரவுகள், இந்த ஆய்வுகளை மேலும் செம்மைப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications