மெதுவாக ஓட்ட சொன்ன போலீஸ்.. வேண்டுமென்றே வேகமாக ஓட்டி.. இடித்து தள்ளி உயிரிழக்க செய்த சம்பவம்
டெல்லி: டெல்லியில் சந்தீப் என்ற காவலர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் அதி வேகமாக சென்றுள்ளது. இதைப் பார்த்த சந்தீப் காரை மெதுவாக செல்ல சொல்லியுள்ளார். ஆனால் வேகத்தை அதிகப்படுத்திய கார் சந்தீப் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நங்கோலி பகுதியில், சந்தீப் என்ற போலீஸ், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தன் பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வேகன் ஆர் கார் அதி வேகமாக வந்துள்ளது. சந்தீப் அந்த காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்தார். அந்த கார் அவரை ஓவர் டேக் செய்ய முயற்சித்துள்ளது.

காரை மிகவும் மோசமாக ஓட்டியதால், அவர் அந்த டிரைவரிடம் மெதுவாக வருமாறு சொல்லியுள்ளார். ஆனால் டிரைவர் சந்தீப் சொன்னதை கேட்கவில்லை. காரின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியவர், வேகமாக சென்று சந்தீப்பின் பைக் மீது இடித்துள்ளனர். இதில் சந்தீப் பைக்குடன் சுமார் 10 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சந்தீப்பை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடி வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் கூறுகையில், காருக்குள் இரண்டு பேர் இருந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த உடனே அவர்கள் தப்பித்துவிட்டனர். நாங்கள் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்.
முதல்கட்டமாக அந்த வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம். இதில் சம்மந்தப்பட்டவர்களை தேடி வருகிறோம். உயிரிழந்த சந்தீப்பு அம்மா, மனைவி மற்றும் தனது 5 வயது மகனுடன் வசித்து வந்தார். இதனிடையே, காரில் இருந்த ஒருவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காவல்துறை அதை உறுதிப்படுத்தவில்லை.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஜிம்மி சிராம் கூறுகையில், சந்தீப் இடது பக்கம் திரும்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது வேகன் ஆர் கார் வேகமாக வந்து ஓவர்டேக் எடுக்க முயன்றுள்ளது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார் அதிவேகமாக சந்தீப்பின் பைக்கை இடித்து தள்ளி விபத்து ஏற்படுத்தியது. இதில் அவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்களை கைது செய்து தண்டனை வாங்கி கொடுப்போம். என்று கூறினார்.
தலைநகர் டெல்லியில் அதி வேகமாக பயணித்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் 32 வயது ஆட்டோ டிரைவர் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயிரிழந்தார். விபத்துகள் தொடர்ந்து நடப்பதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications