குடியரசுத் தலைவரிடம் நேரில் மன்னிப்பு கேட்கிறேன்.. சோனியாவை சீண்டாதீர்கள்.. ஆதிர் ரஞ்சன் விளக்கம்
டெல்லி: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வாய் உளறி இதனை தெரிவித்ததாகவும் இந்த விஷயத்தில் சோனியா காந்தியை இழுக்க வேண்டாம், என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடபாக அமலாக்கத்துறையினர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி நிலையில், இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக போராட்டம் நடத்தினர்.

நேற்று நடந்த இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என குறிப்பிட்டார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் ஜனாதிபதி குறித்து அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்கு பிறகும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், லோக்சபா காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது ட்விட்டரில் இது குறித்து அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது;- நான் தவறு செய்தால் என்னை தூக்கிலிடுங்கள். சோனியா காந்தியை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டம். ஜனாதிபதி என்பவர் பிராமண வகுப்பை சேர்ந்தவரோ அல்லது பழங்குடியின பேண்ணோ யாராக இருந்தாலும் அவர் ஜனாதிபதிதான். இது மிகவும் கவுரமிக்க பொறுப்பாகும்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது என்னிடம் செய்தியாளர்கள் எங்கே செல்கிறீர்கள் எனக் கேட்டனர். இதற்கு பதிலளித்த நான், ராஷ்டிரபதியை சந்திக்க ராஷ்டிரபதி இல்லம் நோக்கி செல்கிறோம் என கூறினேன். அப்போது வாய் தவறி ராஷ்டிரபத்னி என வந்துவிட்டது. ஏனென்றால், கடந்த சில நாட்களாக நமது புதிய ஜனாதிபதி குறித்து பல விவாதங்கள் நடந்தன. இதனால், ஒரே ஒரு முறை தவறி வந்துவிட்டது' என்றார்.












Click it and Unblock the Notifications