ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு கொரோனா பரவல் வேகம் 40% குறைவு.. டிஸ்சார்ஜ் வேகம் அதிகரிப்பு: மத்திய அரசு
டெல்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வளர்ச்சி விகிதம் சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
Recommended Video
லாக் டவுன் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக ஒவ்வொரு மூன்று நாளுக்கு ஒரு முறை, கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்தது. தற்போது அது 6.2 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாக அதிகரித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

சமூக விலகல் மற்றும் கண்டைன்மெண்ட் நடவடிக்கைகள் இதற்கு உதவி செய்துள்ளன என்கிறது மத்திய அரசு.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வைரஸ் தொற்று பரவும் விகிதம் 1.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மார்ச் 15 முதல் மார்ச் 31ம் தேதி வரை இது 2.1 என்ற அளவில் இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் இது 40% வீழ்ச்சியாகும்.
சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வியாழக்கிழமை நிலவரப்படி கேரளாவில் அதிகபட்சமாக 245 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தெலுங்கானாவில் 186 பேர், தமிழகத்தில் 180 பேர், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தலா 164 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில்தான் குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது. அங்கு 3% அதாவது 51 நோயாளிகள் மட்டும்தான் குணமடைந்துள்ளனர்.
லாக்டவுன், நடைமுறையிலுள்ளது, ஹாட்ஸ்பாட் பகுதிகள் அடையாளம் காணப்பட்டது, கண்டைன்மெண்ட் என்று அழைக்கப்படக்கூடிய நோயாளிகள் வசிக்கக்கூடிய பிராந்தியங்கள் இனம் காணப்பட்டு அது சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள், போன்றவை, நோய் பரவல் வேகத்தை குறைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 14 ஆயிரத்து 382 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications