“லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டதா?” அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: "இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது" என்று பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்லும் வசனம் பிரசித்தி பெற்றது. அது வெறும் திரைப்பட வசனம் மட்டும் அல்ல, உண்மையிலேயே நீதிமன்றங்கள் பல்வேறு விசித்திரமான வழக்குகளை நாள்தோறும் சந்திக்கின்றன. அப்படி ஒரு விசித்திர வழக்கை உச்சநீதிமன்றம் தற்போது எதிர்கொண்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த அருணா குமாரி என்பவர், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு விசித்திரமான தகவல் இடம் பெற்றிருந்தது. லஞ்சமாகக் கைப்பற்றப்பட்ட பணத்தை நீதிமன்றப் பாதுகாப்பு அறையில் இருந்த எலிகள் தின்றுவிட்டன. அதனால் ரூபாய் நோட்டுகளை நீதிமன்றத்தில் சாட்சியமாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. பணம் நேரடியாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அறை பதிவேட்டில் பணம் வைப்பில் வைக்கப்பட்டதற்கான குறிப்பு இருப்பதே குற்றத்தை உறுதி செய்யப் போதுமானது என்று கூறி உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அருணா குமாரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீதிமன்றத்தில் சரணாவதில் இருந்து அப்பெண்ணிற்கு விலக்கு அளித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எலிகளால் அழிக்கப்பட்டுவிட்டன என்ற தகவலை அறிந்து நாங்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தோம். இது மாநில அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டுமல்ல, பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. எலிகள் பணத்தைத் தின்றன என்ற விளக்கம் நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை." எனத் தெரிவித்து, ஆதாரங்கள் அழிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அருணா குமாரிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தனர். மேலும், அருணா குமாரிக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
இது மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வருவாய் இழப்பு.. இதுபோன்ற குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படாததால், இதுபோன்று எவ்வளவு ரொக்கம் அழிக்கப்படுகின்றன எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications