"2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்.." ரிசர்வ் வங்கி ஆளுநர் சொன்ன மேட்டர்.. இப்போ ரூ.2000ஐ மாற்றுவது எப்படி
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், தற்போது வரை எத்தனை சதவிகித ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளது என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் சமயத்தில் ரொக்கத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அப்போது நிலைமையைச் சமாளிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி மெல்ல நிறுத்தியது

இதனால் அப்போதே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வரத் தொடங்கின. முதலில் இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. ரிசர்வ் வங்கியும் தங்களிடம் இதுபோல ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றே கூறியது.
ரூ. 2000 நோட்டுகள்: இருப்பினும், கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் வங்கிகளில் தங்கள் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.
இதற்கிடையே 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பெரும்பாலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், இன்னும் 10,000 கோடி ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் அல்லது டெபாசிட் செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ. 10 ஆயிரம் கோடி: இது தொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ரூ. 2,000 நோட்டுகள் திரும்பி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே சிஸ்டத்தில் உள்ளது. அந்தத் தொகையும் திரும்ப வரும் என்றே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். 2000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டதையே இது காட்டுகிறது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிகளில் டெபாசிட்களாக திரும்பியதாகவும், மீதமுள்ளவை வங்கிகளில் ரொக்கமாக மாற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார். 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இப்போது அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரூ.2000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டை படிப்படியாக அகற்றும் திட்டத்தை அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கியில் கவுண்டரில் ரூ.2,000 நோட்டுகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. செப். 30க்குள் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது.
இனி எப்படி மாற்ற முடியும்: அக்டோபர் 8 முதல் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டது. இன்னும் பொதுமக்கள் தங்களிடம் ரூ.2000 நோட்டுகளை வைத்திருந்தால் அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்குச் சென்று தான் மாற்ற முடியும். ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளுக்கு சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு சென்று ஒரே நேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000 வரை மாற்றிக் கொள்ளலாம். அந்த தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்... அதேநேரம் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற எந்தவொரு வரம்பு இல்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications