ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக உயர்வு..வீடு, வாகன கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிப்பு
2023 ஆண்டு பணக்கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதிகரித்து 6.50 புள்ளிகளாக நிர்ணயித்துள்ளது.
டெல்லி: ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவிகிதமாக நிர்ணயம் செய்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்கள் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ உயர உள்ளது.
இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு முடிவு செய்கிறது. ஆறு பேர் கொண்ட இக்குழு இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பிக்கும். இக்கூட்டத்தின் முக்கிய முடிவாக ரெபோ விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

ரெப்போ விகிதம் என்பது, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. 2வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக ஆனது. இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டதால் இஎம்ஐ அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டில் மே முதல் பிப்ரவரி வரையில் மொத்தமாக 2.25 சதவிகித அளவிற்கு ரெப்போ விகிதம் உயர்த்தியது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. மாத சம்பளம் வாங்கி வீடு, வாகனக்கடன் வாங்கியுள்ள நடுத்தர வர்க்க மக்களுக்கு மீண்டும் ஒரு சுமையை ஏற்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி. அதே நேரத்தில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த ரெப்போ வட்டி உயர்வு சாதகமாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications