தங்கம் எல்லாம் வேஸ்ட்..அவசரத்துக்கு கூட இனி உதவாது? ஆர்பிஐ வைத்த ஆப்பு..இந்த 11 பாயிண்ட்களை பாருங்க!
டெல்லி: கடந்த காலங்களில் வங்கிகளில் தங்க நகை கடன் பெறுவதும், மறு அடகு வைப்பதும், திரும்ப நகைகளை திருப்புவதும் எளிதான நடைமுறையாக இருந்து நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளால் மக்கள் கடும் இன்னலை சந்தித்துள்ளனர், இந்த நிலையில் தங்க நகை கடனில் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என புதிய வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அதில் கடன் பெறுவது, கடன் திரும்ப செலுத்துவது, உச்சபட்ச நகை எடை அளவு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2025 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் வருமான வரி தளர்வு உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இருந்தது.
அதில் வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறை வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார். தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் நகை அடகு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டதோடு மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது.

இந்த நிலையில் இந்த புதிய விதிமுறைகள் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு, கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும், அவசர அவசியத் தேவைகளுக்கும் ஏழை, எளிய மக்கள் உடனடி பண உதவி பெறுவதற்கு வங்கி நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ள நிலையில் இது பாதிப்பினை ஏற்படுத்தும் என எதிர்க் கட்சிகளும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் வங்கிகள், பிஎஸ்சி எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற வங்கிகள் போன்றவை தங்க நகை கடன் காலத்தை தன்னிச்சையாக நீட்டிப்பது, குறைப்பது, அல்லது நகை மதிப்பிடுவது, கடன் தொகை நிர்ணயம் என ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையாக செயல்படுகிறது. இதனால் தங்க நகை கடன் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு தொடர் புகார்கள் வந்தது.
இதனால் தங்க நகை கடன் வணிகத்தை முறைப்படுத்தும் வகையில் வரைவு அறிக்கை ஒன்றை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தங்க நகை கடன் வணிகத்தில் முறைகேடுகள் மோசடிகள் மற்றும் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், கடன் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்கள் வங்கி என இரு தரப்பு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
இதில் உள்ள முக்கியமான சில விதிமுறைகளை பார்க்கலாம்..
*தங்க நகை நாணயத்தின் தரம் குறித்த அல்லது தூய்மை குறித்த சோதனைகள் ஆதாரப்பூர்வமாக தரமானதாக இருக்க வேண்டும்.
* 12 மாத காலத்துக்கு மட்டுமே நகை கடன் வழங்க வேண்டும் என்று அதிகபட்ச கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
* ஒரு கிலோவுக்கும் கூடுதலாக ஒருவர் நகைகளை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது.
*ஒருவர் தங்க நாணயங்களாக அடகு வைக்கிறார் என்றால் 50 கிராமுக்கு மேல் அவர் அடகு வைக்க முடியாது
*குறைந்த அளவிலான கேரட் தங்கத்தை நகை கடனுக்காக பெறக் கூடாது.
* தங்க நகைகள் வெள்ளி நகைகள் மீதுதான் கடன் வழங்க வேண்டும். தங்க, வெள்ளி கட்டிகள் மீது வங்கிகள் நிதி நிறுவனங்கள் கடன் தரக் கூடாது.
* தங்க நகைகள் நாணயங்கள் எளிதாக பணமாக்க முடியும் என்பதால் அதன் பேரில் தான் கடன் வழங்க வேண்டும்
*ஒருவர் கடனை எப்படி திருப்பி செலுத்துவார் என்ற தகுதியின் அடிப்படையில் தான் கடன் தொகை வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
* ஒருவர் நகை கடன் கேட்கிறார் என்றால் அந்த நகைகள் அவருக்குத்தான் சொந்தமானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சந்தேகம் இருந்தால் கடன் வழங்க வேண்டாம்.
*தற்போது சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும் ஈடிஎப் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் உள்ளிட்டவற்றின் மீது கடன் வழங்கக் கூடாது
*அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கூட்டுறவு மற்றும் மண்டல கிராம வங்கிகள் கடன் வழங்க வேண்டும்" என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications