உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த உதவி.. உறுதியளித்த பிரதமர் மோடி.. கவனிக்கும் உலக நாடுகள்! என்ன நடந்தது?
டெல்லி: உக்ரைன்-ரஷ்யா இடையே இருந்த எல்லை பிரச்சனை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ல் போராக வெடித்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து சென்றுள்ளது. போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இன்னும் முடிவு என்பது எட்டப்படவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ரஷ்யா தொடர்ந்து போரை மேற்கொண்டு வருகிறது. இந்த போரை நிறுத்தும் சக்தி என்பது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பராக உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் உள்ளது என உலக நாடுகள் கூறி வரும் நிலையில், ‛‛உக்ரைன் போருக்கு தீர்வு காணும் வகையில் உதவ இந்தியா தயாராக உள்ளது'' என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசியதற்கு பின்பு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை இருந்த நிலையில் உக்ரைன் அமெரிக்காவின் நாட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது போர் நடவடிக்கையை துவங்கியது. இந்த போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
இந்த போரால் உக்ரைன் நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். பல லட்சம் பேர் வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் பல ஆயிரம் பேர் அங்கு மரணித்துள்ளனர். அதேபோல் உக்ரைன் கொடுக்கும் பதிலடியில் ஏராளமான ரஷ்ய ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இருநாடுகளுக்கும் இந்த போர் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடுநிலை வகிக்கும் இந்தியா
இந்த போரை ரஷ்யா கைவிட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடக்கம் முதலே கூறி வருகிறது. இதற்கு செவிசாய்க்காத ரஷ்யா மீது பொருளாதா தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இருப்பினும் இந்த விஷயத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை நிறுத்தி பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மோடி மீது நம்பிக்கை
மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதினுடன், பிரதமர் மோடி நெருங்கிய நண்பராக உள்ளார். இதனால் பிரதமர் மோடி சொன்னால் புதின் நிச்சயம் கேட்பார் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் போரை நிறுத்தும் வகையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது.

ஜெர்மனி பிரதமர் சந்திப்பு
அதாவது ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான உறவை பலப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகள், பிராந்திய பிரச்சினைகள், உக்ரைன் விவ காரம் உட்பட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜெர்மன் பிரதர் ஓலப் ஸ்கால்ஸும், பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினர். அதன்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

போரால் ஏற்பட்ட பேரழிவு
ஜெர்மனி ஸ்கால்ஸ் அளித்த பேட்டியில், ''உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் விளைவுகளை அனைத்து நாடுகளும் அனுபவிக்கின்றன. வன்முறை மூலம் யாரும் எல்லைகளை மாற்ற முடியாது. உக்ரைன் போரால் ஏராளமான பேரழிவும் ஏற்பட்டுள்ளது. இந்த போரால், ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக் கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.

போரை நிறுத்த உதவி என மோடி தகவல்
இதையடுத்து பிரதமர் மோடி கூறுகையில், ‛‛உக்ரைன் பிரச்சினை தொடங்கியது முதலே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. எந்தவித அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான நடவடிக்கைக்கும் உதவ இந்தியா தயாராக உள்ளது. கொரோனா மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புகளை மொத்த உலகமும் புரிந்து கொண்டுள்ளது. தீவிரவாதத்தக்கு எதிராக போராடுவதில் இந்தியா-ஜெர்மனி இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட, உறுதியான நடவடிக்கை அவசியம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகள் இடையேயான உறவில் ராணுவ ஒத்துழைப்பு முக்கிய தூணாக இருக்கும்'' என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications