கோரிக்கையில் சமரசம் இல்லை.. அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்.. ராகேஷ் டிக்கைட் அறிவிப்பு
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ள விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது.
இது குறித்து மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர் எவ்வித பேச்சுவார்த்தையும் இரு தரப்பினருக்கும் இடையே நடத்தப்படவில்லை,

பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்நிலையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார். இது குறித்து ராகேஷ் டிக்கைட் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ, அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராகவுள்ளோம். அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர்.

சமரசம் இல்லை
மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்விச சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என அதில் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

நரேந்திர சிங் தோமர் கோரிக்கை
முன்னதாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அழுத்தம்
சர்வதேச அளவிலும் பல பிரபலங்கள் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைக் கண்டிக்கும் வகையில் கனடாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் நடவடிக்கைகளைக் கனடா அரசு கண்டிக்க வேண்டும் என்றும் டெல்லியில் விவசாயிகள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications